மாவட்டங்களின் கதைகள் - பெரம்பலூர் மாவட்டம்( PERAMBLLUR DISTRICT)
பெரம்பலூர் மாவட்டம்
( PERAMBLLUR DISTRICT)
( PERAMBLLUR DISTRICT)
தொல்லுயிர் எச்சங்களின் படிவு கொண்ட சாத்தனூர் மரப்படிவு அமைந்துள்ள மாவட்டம்
அடிப்படைத் தகவல்கள்
| |
| தலைநகர் | பெரம்பலூர் |
| பரப்பு | 3,691 ச.கி.மீ |
| மக்கள்தொகை | 4,93,646 |
| ஆண்கள் | 2,46,141 |
| பெண்கள் | 2,47,505 |
| மக்கள் நெருக்கம் | 282 |
| ஆண்-பெண் | 1,006 |
| எழுத்தறிவு விகிதம் | 66.07 |
| இந்துக்கள் | 4,60,058 |
| கிருத்தவர்கள் | 8,412 |
| இஸ்லாமியர்த 24,778 | |
புவியியல் அமைவு
அட்சரேகை: 100-57-110.30N
தீர்க்கரேகை: 780.40-790.30E
இணையதளம்: www.peramballur.tn.nic.in
தீர்க்கரேகை: 780.40-790.30E
இணையதளம்: www.peramballur.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள் - 1: பெரம்பலூர்
தாலூகாக்கள் - 3: பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம்
நகராட்சி-1: பெரம்பலூர்
ஊராட்சி ஒன்றியங்கள் - 4: பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர்.
இருப்பிடமும், சிறப்பியல்புகளும்:
- சென்னையிலிருந்து 267 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
- கடற்கரை இல்லா உள்மாவட்டம்.
- ஜிப்சம், சுண்ணாம்புக்கல், நிலக்கரி, அரளைக் கற்கள் என்று கனிம வளம் மிகுந்தது.
- தமிழகக் கலைத் திறனை உலகம் முழுவதும் பறைசாற்றும் மரச்சிற்பங்கள் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகில் உள்ள தழுதழை கிராமத்தில் உருவாக்கப்படுகின்றன.
- துறையூர் சுருட்டு உலகப் புகழ்பெற்றது.
எல்லைகள்: இதன் வடக்கில் கடலூர், தெற்கில் திருச்சி, கிழக்கில் அரியலூர், தஞ்ஞாவூர், மேற்கில் நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்கள் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: திருச்சி மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்ட மாவட்டம் என்பதால் இதன் முற்கால வரலாறு என்பது திருச்சி மாவட்ட வரலாறே..
1995 இல் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர்) பெரம்பலூர் மாவட்டம் உருவானது.
பிற்பாடு 2000 ஆண்டில் பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அரியலூர் என்னும் இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. 2002 இல இந்த இரு மாவட்டங்களும் பெரம்பலூர் மாவட்டமாக ஒன்றிணைக்கப்பட்டது.
முக்கிய ஆறுகள்: வெள்ளாறு மற்றும் கொள்ளிடம்.
குறிப்பிடத்தக்க இடங்கள்
சோழகங்கம் ஏரி: முதலாம் இராசேந்திரச் சோழன் தனது வெற்றியைக் குறிக்கும் நினைவாக உருவாக்கிய 'வெற்றி நீர்த்தூண்' ஐந்து கி.மீ. தொலைவிற்கு நீண்டு பரந்து கிடக்கும். இந்த ஏரி 130 ச.கி.மீ. பரப்பளவு வயல்களுக்குப் பாசனம் அளித்து வருகிறது.
சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில்
மாவட்டத்தின் பிரபலமான கோயில்களில் ஒன்று. சித்திரை மாதம் முதல் நாளில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.
ரஞ்சன் குடி கோட்டை: கர்நாடக நவாப்பிடம் ஜாகிர்தார்ராக இருந்த ஒருவரால் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கச்சிதமாகச் செதுக்கப்பட்ட கல் சதுரங்களால் கட்டப்பட்ட இக் கோட்டைக்குள் ஓர் அரண்மனை, குடியிருப்புக் கட்டிடங்கள், பாதாள அறை, மசூதி மற்றும் கொடி மேடை ஆகியவை உள்ளன.
பச்சைமலை அருவி: பெரம்பலூரிலிருந்த 17 கி.மீ. தூரத்தில் வாடபுரம் கிராமத்தின் அருகிலுள்ள பச்சை மலை மயில் ஊற்று நீர் அருவி.
செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில்: குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட இக்கோவிலில் வருடம்தோறும் ஜனவரியில் தைப்பூசத்தின் போது பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.
துருவக் கோட்டை: மங்களமேடு அருகில் உள்ளது.
சாத்தனூர் மரப்படிவு: Fossil Tree.
பிற இடங்கள்: செட்டிகுளம் பால தண்டாயுத பாணி ஆலயம், கள்ளக்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் ஆலயம், லப்பை குடிகாடு பெரிய தர்கா
தமிழக மாவட்டங்களின் முக்கியமான மலைகளின் பெயர்களை மாவட்ட வாரியாக வரிசைப்படுத்தி உள்ளேன்.
மலைகளும் மாவட்டங்களும்
| |
| அகஸ்தியர் மலை | திருநெல்வேலி |
| ஏலகிரி மலை | வேலூர் |
| கஞ்ச மலை | சேலம் |
| கல்வராயன் மலை | திருநெல்வேலி |
| கொடைக்கானல் மலை | திண்டுக்கல் |
| கொல்லி மலை | நாமக்கல் |
| சக்கு மலை | சேலம் |
| சிவன் மலை | ஈரோடு |
| செஞ்சி மலை | விழுப்புரம் |
| சென்னி மலை | ஈரோடு |
| சேர்வராயன் மலை | சேலம் |
| தீர்த்த மலை | தர்மபுரி |
| பச்சை மலை | பெரம்பலூர் |
| பழனி மலை | திண்டுக்கல் |
| மகேந்திரகிரி மலை | திருநெல்வேலி |
| மருந்துவாழ் மலை | கன்னியாகுமரி |
| ரத்னகிரி மலை | வேலூர் |
| வள்ளிமலை | வேலூர் |
| ஜவ்வாது மலை | வேலூர் |
பதிவைப் பற்றிய உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்படுகிறது. பதிவு பயனுள்ளதாக நீங்கள் கருதினால் உங்கள் நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் அறியத் தாருங்கள். விருப்பப்பட்டால் கீழிருக்கும் திரட்டிகளில் இணைத்து உங்கள் ஓட்டையும் பதிவு செய்யலாம். இதனால் பதிவு பலரையும் சென்றடைய ஒரு வாய்ப்பாக அமையும். இது முழுக்க முழுக்க உங்கள் விருப்பமே..!!
www.thangampalani.com thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக