வியாழன், 8 மார்ச், 2012

திருநெல்வேலி மாவட்டம்


மாவட்டங்களின் கதைகள் - திருநெல்வேலி மாவட்டம்(Tirunelveli)



திருநெல்வேலி மாவட்டம்

தென்னிந்தியாவின் ஸ்பா' எனப்படும் குற்றாலத்தின் சாரலடிக்கும் மாவட்டம்

அடிப்படைத் தகவல்கள்
தலைநகர்
 திருநெல்வேலி
பரப்பு
 6,623 .கி.மீ.
மக்கள்தொகை
 28,01,194
ஆண்கள்
 13,72,082
பெண்கள்
 14,29,112
மக்கள் நெருக்கம்
 400
ஆண்-பெண்
 1,042
எழுத்தறிவு விகிதம்
 68.44%
இந்துக்கள்
 21,72,815
கிருத்தவர்கள்
 2,96,578
இஸ்லாமியர்
 2,52,235

புவியியல் அமைவு

அட்சரேகை: 080.8-090.23 N
தீர்க்கரேகை: 770.09-770 E

இணையதளம் 
www.nellai.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrtnv@tn.nic.in
தொலைபேசி: 0462-2500828

நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள் - 3: திருநெல்வேலி, சேரன்மாதேவி, தென்காசி,
தாலூகாக்கள் - 11: திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சங்கரன் கோவில், தென்காசி, செங்கோட்டை, சிவகிரி, நான்குநேரி, ராதாரபுரம், அம்பாசமுத்திரம், ஆலங்குளம், வீர கேரளம்புதூர்,
மாநகராட்சி -1: திருநெல்வேலி,
நகராட்சிகள் - 7: கடையநல்லூர், சங்கரன் கோவில், தென்காசி, புளியங்குடி, செங்கோட்டை, அம்பாசமுத்திரம், விக்ரமசிங்கபுரம்.
ஊராட்சி ஒன்றியங்கள்-19: ஆலங்குளம், கீழப்பாவூர், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், அம்பா சமுத்திரம், சேரன்மாதேவி, களக்காடு, வள்ளியூர், நான்குநேரி, ராதாபுரம், கடயம், பாப்பாக்குடி, பாளையம்கோட்டை, மண்ணூர், மேலநீலித நல்லூர், சங்கரன் கோவில், குருவிகுளம்.

எல்லைகள்: இதன் வடக்கில் விருதுநகர் மாவட்டமும்; கிழக்கில் தூத்துக்குடி மாவட்டமும்; மேற்கில் கேரள மாநிலத்தின் திருவிதாங்கூர் பகுதியும், கன்னியாகுமாரி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு:  பிற்கால பாண்டியர் காலத்தில் தென்பாண்டி நாடு என்றும்; சோழர் காலத்தில் முடிகொண்ட சோழமண்டலம் என்றும்; நாயக்கர் காலத்தில் திருநெல்வேலிச்சீமை என்றும்; கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் பிரிட்டீஷ் நிர்வாகத்தில் 'டின்னவேலி" மாவட்டம் (1790 செம்டம்பர்-1), சுதந்திர இந்தியாவில் திருநெல்வேலி மாவட்டம் என்றும், 1985இல் மாவட்டப் பிரிவினையின் போது நெல்லை-கட்டபொம்மன் மாவட்டம் என்றும் வழங்கபட்டது.

பிற்பாடு மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே மாவட்டங்கள் அழைப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவையடுத்து இது திருநெல்வேலி மாவட்டம் என அழைக்கப்படுகிறது.

முக்கிய ஆறுகள்: தாமிரபரணி, சிற்றாறு, நம்பியாறு, பச்சையாறு, கொடுமுடியாறு, கடனாந்ததி, இராமா நதி.

குறிப்பிடத்தக்க இடங்கள்

ஆத்தங்கரை பள்ளிவாசல்: நெல்லையிலிருந்து 46கி.மீ தொலைவில் உள்ளது.  அனைத்து சமயத்தவரும் வழிபடும் இடம் இது.

மாவட்ட அறிவியல் மையம்: இந்தியாவின் 124 அறிவியல் மையங்களில் ஒன்று.

மாஞ்சோலை: நெல்லையிலிருந்து 57 கி.மீ. தூரத்தில் 1,162 ச.மீ பரப்பளவில் அமைந்துள்ள தேயிலைத்தோட்டம்.  இக்கே 4,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

பத்தமடை: கைக்குள் சுருட்டிவிடும் அளவுக்கு நேர்த்தியான கோர்பாய்களுகுப் பெயர் பெற்ற ஊர். சுவாமி சிவானந்தா பிறந்த ஊர்.

நெல்லயப்பர் காந்திமதி கோயில்:  நெல்லையின் முக்கியச் சிறப்பே இக்கோயில்தான்.  அரிய வேலைப்பாடுகள் கொண்ட ஆபரணங்கள், தங்க அல்லிக்குளம், இசைத்தூண்கள், ஆயிரங்கால் மண்டபம் போன்றவை இக்கோயிலின் தனிச்சிறப்பு.

ட்ரினிடி கதீட்ரல் தேவாலயம்: 1826 இல் ரெவன்ட் ரெகினியஸ் என்பவரால் கட்டப்பட்ட அழகிய தேவாலயம். நெல்லையிலிருந்து இரண்டு கி.மி.தொலைவில் முருகன் குறிச்சியில் அமைந்துள்ளது.

குற்றாலம் அருவி: மூலிகைக் குணம் நிறைந்த இந்த அருவி நீரில் நீராடினால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.  இது மேற்குத் தொடர்ச்சி  மலையிலிருந்து உற்பத்தியாகிறது.

இருப்பிடமும், சிறப்புகளும்:


இருப்பிடமும், சிறப்பியல்களும்
சென்னையிலிருந்து 603 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
சிங்கவால் குரங்குபுள்ளிமான்கள்காட்டுப் பூனைகள்நிறைந்த வளநாடு பிளாக்பக் சரணாலயம்.
களக்காடு புலிகள் சரணாலயம் கூந்தக் குளம்மூன்றடைப்பு பறவைகள் சரணாலயம்
குற்றாலம் சாரல் விழா எல்லா வருடமும் ஜூலையில் நடக்கும் குளு குளு விழா.
பாவங்களை நாசம் செய்யும் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலையில் அமைந்துள்ளது.
கிருஷ்ணாபுரம் சிற்பக்கலைக்குப் பெயர் பெற்றது.
குறிப்பிடத்தக்கோர்: ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார்,சுதந்திரப் போராட்டவீர்ர் புலித்தேவன்வாஞ்சிநாதன்உ.வே.சா.,ரா.பி. சேதுப்பிள்ளைகா.சு. பிள்ளைபெ.நா. அப்பு சாமி,புதுமைப்பித்தன்எஸ்.ஜி. கிட்டபாகாரகுறிச்சி அருணாசலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக