வியாழன், 8 மார்ச், 2012

திண்டுக்கல் மாவட்டம்



மாவட்டங்களின் கதைகள் - திண்டுக்கல் மாவட்டம் (Dindigul)


`
திண்டுக்கல் மாவட்டம்

தமிழகத்தின் முதல் நிகர்நிலைப் பல்கலைக்கழகமான காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தின் இருப்பிடம்.


அடிப்படைத் தகவல்கள்
தலைநகர்
 திண்டுக்கல்
பரப்பு
 6,266.கி.மீ
மக்கள்தொகை
 19,23,014
ஆண்கள்
 9,68,137
பெண்கள்
 9,54,877
மக்கள் நெருக்கம்
 317
ஆண்-பெண்
 286
எழுத்தறிவு விகிதம்
 69,35%
இந்துக்கள்
 16,84,808
கிருத்தவர்கள்
 1,45,265
இஸ்லாமியர்
 89,680
புவியியல் அமைவு
அட்சரேகை
 100.05-10.09 N
தீர்க்க ரேகை
 730-70-780.20 E

இணையதளம்:
www.dindigul.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: cllrdgl@tn.nic.in
தொலைபேசி: 0451-246119


எல்லைகள்: இதன் வடக்கில் ஈரோடு, கோவை, கரூர், திருச்சி மாவட்டங்களும்,  கிழக்கில் சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டங்களும்; தெற்கில் மதுரை மாவட்டமும், மேற்கில் தேனி, கோயம்புத்தூர் மற்றும் கேரள மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: திப்புசுல்தான் ஆட்சியின் கீழிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகரும். மதுரை மாவட்டத்திலிருந்து 1985, செப்டம்பர் 15-இல் திண்டுக்கல் அண்ணா எனும் பெயரில் புதிதாக உருவாக்கப்பட்டது.

1989, மார்ச் 27-இல் திண்டுக்கல் காயிதே மில்லத் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  1991, ஜூலை 18-இல் திண்டுக்கல் அண்ணா என்று பெயர் மாற்றம் 1996-இல் திண்டுக்கல் மன்னர் திருமலை மாவட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

இறுதியாக 1997, ஜூலை முதல் திண்டுக்கல் மாவட்டம் என அழைக்கப்படுகிறது.

முக்கிய ஆறுகள்: மருதாந்தி, வரதமாநதி, பாலாறு, பெருந்தலாறு, பரப்பலாறு, குதிரையாறு.

நிர்வாகப் பிரிவுகள்: 

வருவாய் கோட்டங்கள்-31: திண்டுக்கல், கொடைக்கானல், பழனி,
தாலுகாக்கள் - 8: திண்டுக்கல், நிலக்கோட்டை, ந்ததம், ஒட்டம் சத்திரம், வேடசந்தூர், பழனி , கொடைக்கானல், ஆத்தூர், நகராட்சிகள் - 3; திண்டுக்கல், கொடைக்கானல், பழனி.

ஊராட்சி ஒன்றியங்கள்-14: ஆத்தூர், திண்டுக்கல், ரெட்டியார் சத்திரம், சாணார்ப்பட்டி, ந்ததம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, பழனி, தோப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், வட மதுரை, வேடசந்தூர், குசிலியாம்பாறை, கொடைக்கானல்.

குறிப்பிடத்தக்க இடங்கள்

கொடைக்கானல் ஏரி: கொடைக்கானலின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரி, மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி சர் வேரி ஹென்றி லெவிஞ்சி என்பவரால் திருத்தி அழகுபடுத்தப்படது.  1932-இல் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கபட்டது.

லா சலேத் சர்ச்: உலகிலேயே இரண்டு இடங்களில்தான் இந்த சர்ச் உள்ளது.  ஒன்றி பிரான்சிலும் மற்றொன்று கொடைக்கானலிலும் அமைந்துள்ளது.

தலையாறு அருவி: கொடைக்கானலுக்குச் செல்லும் மலைத் தொடர் சாலையில் பதிமூன்றாவத உகி.மீட்டரில் உள்ளது.  இதற்கு எலிவால் அருவி என்ற பெயரும் உண்டு.  இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றான இதன் உயர் 975 அடி.

கோக்கர்ஸ் வாக்: மலை விளிம்பு காலடிப்பாதை.  கொடைக்கானலின் தென்திசை உச்சியிலுள்ள இவ்விடத்தைக் கண்டறிந்தவர் பொறியாளர் கோக்கர்.  இது சரேலென இறங்கும் செங்குத்தான மலைச் சரிவைக்கொண்டது.

நடுப்பட்டி ஆஞ்சநேயர் கோயில்: ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் சிலை பெரும்பாலும் நீரால் சூழப்பட்டிருக்கும். திண்டுக்கல்லில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது.

புனித ஜான் தேவாலயம்: 125 வருட பழமையான இத்தேவாலாயம் தாமஸ் பெர்னாண்டோ என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்டது.

பசுமைப் பள்ளத்தாக்கு: அழகும், அபாயமும் ஒருங்கே கொண்ட பள்ளத்தாக்கு.  இதன் முற்காலப் பெயர் தற்கொலை முனை.  கொடை ஏரியிலிருந்து பசுமைப் பள்ளத்தாக்கு 5.5 கி.மீ. தொலைவில் உள்ளது.

செம்பகனூர் அருங்காட்சியகம்: தொல்பொருள் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட மலரினங்கள் பலவும் பாதுகாக்கப்படுகின்றன.  300 வகையான அபூர்வ மலர் வகைகள் பராமரிக்கப்படுகின்றன.

கோல்ஃப் கிளப்: தேசிய அளவில் கோல்ஃ விளையாட்டுப் போட்டிகள்  இங்குநடைபெறுகின்றன.


இருப்பிடமும் சிறப்புகளும்:
சென்னியிலிருந்து 298 கி.மீ. தொலைவில் அமைந்தள்ளது.
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலருக்கு புகழ்பெற்றது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி இங்கே அமைந்துள்ளது.
திண்டுக்கல்  பூட்டு சிறப்பு மிக்கது.
நிலக்கடலைஅங்கு விலாஸ் புகையிலைவெங்காயம் மொத்தச் சந்தை.
சின்னாளப்பட்டி சுங்கிடிப் புடவைகள்பூக்கள் மற்றும் திராட்சை,சிறு மலை வாழ்ப்பழம் போன்றவற்றிற்கு புகழ்  பெற்றது.
கொடைக்கானல்மலைக்கோட்டைபழனி மற்றும் திருமலைக் கேணி.
பழனிமுருகன் ஆலையம்திரமலைக்கேணி முருகன் ஆலயம்,கோபிநாத சுவாமிகள் மலைக் கோயில்வத்தலக்குண்டு செண்ட்ராய் பெருமாள் மலைக்கோயில்.
பேகம்பூர் பெரியப்பள்ளிவாசல்புளிப்பட்டி தர்காகொடைக்கானல் சலேத்துமேரி ஆலயம்பனுதி ஜோசஃப் தேவாலயம்.
தியாகி சுப்ரமணிய சிவா பிறந்த இடம் வத்தலக்குண்டு.
www.thangampalani.com thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக