புதன், 7 மார்ச், 2012

ஈரோடு


மாவட்டங்களின் கதைகள்- ஈரோடு(Erode District)



ஈரோடு

தமிழ்நாட்டின் மஞ்சள் விலை நிர்ணயம் செய்யப்படுவது ஈரோடு சந்தையில்தான். 


தலைநகர்
 ஈரோடு
பரப்பு
 8,162 ச.கி.மீ
மக்கள் தொகை
 25,81,500
ஆண்கள்
 13,09,278
பெண்கள்
 12,72,222
மக்கள் நெருக்கம்
 314
ஆண்-பெண்
 972
எழுத்தறிவு விகிதம்
 65.36%
இந்துக்கள்
 24,43,644
கிருத்தவர்கள்
 55,414
இஸ்லாமியர்
 77,211
புவியயல் அமைவு:


அட்சரேகை: 10.36 - 11.58N
தீர்க்க ரேகை: 76.49 - 49-77.58 E
இணைய தளம்: www.erode.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrerd@tn.nic.in
தொலைபேசி: 0424-2266700

எல்லைகள்: தெற்கில் திண்டுக்கல் மாவட்டமும், கிழக்கில் சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களும், வடக்கில் கர்நாடக மாநிலமும், மேற்கில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தமையால் இதன் வரலாறும் கோயம்புத்தூர் மாவட்டத்துடனேயே பின்னிப் பிணைந்துள்ளது.  இரு மாவட்டங்களும் இணைந்த பகுதிகள் சங்க காலத்தில் 'கொங்கு நாடு' என்றழைக்கபட்டது.

பழங்குடியினரிடமிருந்து ராஷ்டிர கூடர்களால் கைப்பற்றப்பட்ட இப்பகுதி, பிற்பாடு ராஜராஜ சோழன் ஆட்சிக்குட்பட்டது.  சோழர்களின் வீழ்ச்சிக்குப்பின் சாளுக்கியர், பாண்டியர், ஹொய்சாளர்கள் என்று இது பல்வேறு ஆட்சிகளுக்குட்பட்டது.

பிற்பாடு மதுரை சுல்தானியம், விஜயநகரம், மதுரை நாயக்கர் ஆட்சிக்குட்பட்டது.

நிர்வாகப் பிரிவுகள்

வருவாய் கோட்டங்கள் இரண்டு: ஈரோடு, கோபிச்செட்டிப் பாளையம்,

தாலுக்காக்கள் ஐந்து : ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிச்செட்டிப் பாளையம், சத்திய மங்கலம்

மாநகராட்சிகள் ஒன்று: ஈரோடு.

நகராட்சிகள் எட்டு: கோபிச்செட்டிப் பாளையம், சத்தியமங்கலம், பவானி, காசிப்பாளையம், பெரிய சேமூர், புஞ்சைப் புளியம்பட்டி, சூரம் பட்டி, வீரப்பன் சத்திரம்.

ஊராட்சி ஒன்றியங்கள் பதினான்கு: ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, பவானி, அம்மாப்பேட்டை, அந்தியூர், கோபிச்செட்டிபாளையம், நம்பியூர், தூக்க நாயக்கன் பாளையம், சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி

1799 இல் மைசூர் திப்பு சுல்தான் வீச்சியை அடுத்து, பிரிட்டீஷாரால் முடிசூட்டப்பட்ட மைசூர் மகாராஜா இதை பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கினார். அன்றிலிருந்து இந்திய சுதந்திரம் வரை இது பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திலேயே இருந்தது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து 1979, ஆகஸ்ட் 31 - ல் ஈரோடு மாவட்டம் தனியே உருவாக்கபட்டது.

முக்கிய ஆறுகள்: காவிரி, நொய்யல், பவானி, அமராவதி

குறிப்பிட்டத்தக்க இடங்கள்: சத்திய மங்கலத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணை, கொடிவேரி அணை, தாளவாடி மலை, தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் கோவிலில் ஒன்றான பண்ணாரி அம்மன் கோவில், விஜயமங்கலம் ஜைனக் கோவில், கொடுமுடி மச்ச கண்டீஸ்வர்ர் சிவன் கோவில், தாராபுரம் காடு ஹனுமந்த சுவாமி கோவில்.

சென்னிமலை: நெசவுக்குப் புகழ் பெற்ற நகரம். இங்குள்ள முருகன் கோவில் புகழ்பெற்றது.  அருணகிரிநாதர் இறைவனிடம் ஆசிகளாகப் படிக்காசு பெற்ற இடம்.

ஶ்ரீ கொண்டாத்து காளியம்மன் கோயில்:

முழுவதும் சலவைக் கற்களால் உருவானது.  இன்றும் இங்கே அம்மன் முன்னிலையில் பூப்போட்டுப் பார்க்கும் நடைமுறையில் உள்ளது.

சங்கமேஸ்வரர் கோயில்: பவானி ஆறு, காவிரி ஆறு, அமுத நதி சங்கமிக்கும் இடம், தென்னிந்தியாவின் திரிவேணி என்றழைக்கப்படுகிறது.


இருப்பிடமும் சிறப்புகளும்




Ø  சென்னையிலிருந்து 400 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
Ø  கடற்கரை இல்லா மாவட்டம்.
Ø  குதிரைச் சந்தை பிரபலமானது.
Ø  பவானி ஜமுக்காலம் பெயர்பெற்றது.
Ø  ஊத்துக்குளி வெண்ணெய் மற்றும் காங்கேயம் காளை.
Ø  கைத்தறி நெசவு ஆடை ஏற்றுமதியில் இம்மாவட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
Ø  வெள்ளோடு பறைவகள் சராணாலயம் (ஈரோட்டிலிருந்து 15 கி.மீ.)
Ø  மலைக்கோவில் நிறைந்தவை. முக்கிய மலைக்கோவில்கள் நான்கு. சிவன் மலை,சென்னி மலைதிண்டல் மலைவட்ட மலை.
Ø  ஈரோடு மஞ்சள்மஞ்சள் சாகுபடிக்குப் பெயர் பெற்ற மாவட்டம்.
Ø  குறிப்பிடத்தக்கோர்: தீரன் சின்னமலைநரேந்திர தஏவர்பெரியார் ஈ.வெ. இராமசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக