புதன், 7 மார்ச், 2012

கோயம்புத்தூர்


மாவட்டங்களின் கதைகள் - கோயம்புத்தூர் (Coimbatore)


கோயம்புத்தூர்

தென்னிந்தியாவின் 'மான்செஸ்டர்' எனப்படும் டெக்ஸ்டைல் மாவட்டம்


அடிப்படைத் தகவல்கள்


தலைநகர்
 கோயம்புத்தூர்
பரப்பு
 7,470 .கி.மீ
மக்கள் தொகை
 42,71,656
ஆண்கள்
 21,76,031
பெண்கள்
 20,95,825
மக்கள் நெருக்கம்
 572
ஆண்-பெண்
 963
எழுத்தறவிவு விகிதம்
 75.97%
இந்துக்கள்
 38,47,969
கிருத்தவர்கள்
 1,85,737
இஸ்லாமியர்
 2,27,734
புவியியல் அமைவு

அட்சரேகை
 100.10-110.30N
தீர்க்க ரேகை
 760.40-770.30E


இணையதளம் 
www.coimbatore.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrcbe@tn.nic.in
தொலைபேசி: 0422-2301320

எல்லைகள்: இதன் வடக்கு மறறும் கிழக்கில் ஈரோடு மாவட்டமும், மேற்கிலும் தெற்கிலும் மேற்குத்தொடர்ச்சி மற்றும் ஆனைம்மலைத்தொடரும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: சங்க காலத்தில் கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.

முற்காலத்தில் கோயம்புத்தூரிலிருந்து ஏழு கி.மீ. தொலைவிலுள்ள பேரூர் என்பதே மிகப்பெரிய ஊர். கோயம்புத்தூர் இதில் அடங்கிய ஒரு சிறுகிராமமே. திப்புசுல்தான் மறைவிற்குப் பின் (1779), கோயம்புத்தூர் கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்திற்குட்பட்டது. 1805-இல் கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியா சுதந்திரம் அடையும் வரை இது ஆங்கிலேயர் ஆதிக்கதின் கீழிலேயே இருந்து. 1866-இல் கோயம்புத்தூர் நாகராட்சியானது.

முக்கிய ஆறுகள்: சிறுவாணி, அமராவதி.

குறிப்பிடத்தக்க இடங்கள்:

குழந்தை ஏசு தேவலாயம்: கிருத்தவர்களின் வணக்கத்ததிற்குரிய பெருமை மிகு தேவாலயம், கோயம்புத்தூர் நகருக்கு மிக அருகில் கோவைப்புதூரில் அமைந்துள்ளது.

கோட்டை மேடு மசூதி: இஸ்லாமியக் கட்டடக்கலையின் சிறப்புகளைக் கொண்ட கோவையில் எழுந்த முதல் மசூதி என்ற பெருமை கொண்டது. இதன் பிரிவாக ஒரு உருது கல்லூரியும் செயல்பட்டு வருகிறது.

ஈஷா யோக மையம்: சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களால் உருவாக்கட்ட தியானலிங்கம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களை ஈர்த்து வருகிறது.

வால்பாறை: மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இப்பகுதி மிகப் பெரிபலமான சுற்றுலாத்தலம். தேயிலைத் தோட்டங்களும், பண்ணைகளும் நிறைந்த பசுஞ்சோலை.

ஆனைமலை விலங்குகள் சரணாலயம்: மேற்குத்தொடர்ச்சி மலையில் 1400மீ. உயரத்தில் 958 ச.கி.மீ. பரப்பில் அமைந்துள்ளது. இங்கு யானை, காட்டெருமை, தேவாங்கு, கரடிகள், கரும் பொன்னிறப் புறவைகள், எற்முப்துத் தின்னி போன்றவைகளைக் காணலாம்.

சிறுவாணி அருவி: உலகச்சுவை நீர் தரத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றது சிறுவாணி ஆற்று நீர். இது 'கோவையின் குற்றாலம்' எனவும் சிறப்பிக்கப்படுகிறது.

காரமடை ரெங்கநாதர் ஆலயம்: விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட கோயம்பத்தூரின் மிகப் பழமையான இரண்டாவது ஆலயமான இங்கு ரெங்கநாதர் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளிக்கிறார்.

கொங்கு நாட்டு திருப்பதி: கொங்கு திருப்பதி என அழைக்கப்படும் இங்கு புரட்டாசி சனிக்கிழமை விஷேசமானது.

தேசியப் பூங்காக்கள்

முதுமலை - நீலகிரி
கிண்டி - சென்னை
மன்னார் வளைகுடா - இராமநாதபுரம்
இந்திராகாந்தி பூங்கா - கோயம்புத்தூர்
முக்குறுத்தி - நீலகிரி

இருப்பிடமும் சிறப்பியல்புகளும்:


சென்னையிலிருந்து 532 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
தமிழகத்தின் மிக உயர்ந்த சிகரம் ஆனைமுடி (2697 மீ)
தமிழகத்தின் முன்னணித் தொழில் நகரம்.
பங்குச் சந்தை செயல்பட்டு வருகிறது.
கோயம்புத்தூரில் விமான நிலையம் உள்ளது.
அமராவதி நீர்தேக்கம்
'தென்னாட்டு காசிஎன்றழைக்கப்படும் அவினாசி லிங்கேஸ்வர்ர் ஆலையம் கோவையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது.
அறுபடை வீடுகளில் ஒன்றான மருத மலை.
'வாழ்க வளமுடன்என்ற அருள் வாசகம் தந்த அருட்தந்தை யோகிராஜ் வேதாத்ரி மகரிஷியால் நிறுவப்பட்டதே ஆழியாறு அறிவுத் திருக்கோயில்.


குறிப்பிடத்தக்கோர்:

 உடுமலை நாராயண கவி



ஜி.டி. நாயுடு

G.T. Naidu


 அவிநாசிலிங்கம் செட்டியார்
avinasilingam settiyar


சி. சுப்பிரமணியம்
c.subramaniyam

பொள்ளாச்சி மகாலிங்கம்.

pollachi mahalingam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக