வியாழன், 8 மார்ச், 2012

திருச்சிராப்பள்ளி மாவட்டம்


மாவட்டங்களின் கதைகள் - திருச்சிராப்பள்ளி மாவட்டம்(Trichy)




திருச்சிராப்பள்ளி மாவட்டம்

தென்னிந்திய வாழைச் சாகுபடியில் முன்னணிப் பகுதி

அடிப்படைத் தகவல்கள்
தலைநகர்
 திருச்சி
பரப்பு
 4.403 .கி.மீ.
மக்கள்தொகை
 24,18,366
ஆண்கள்
 12,08,534
பெண்கள்
 12,09,832
மக்கள் நெருக்கம்
 549
ஆண்-பெண்
 1,001
எழுத்தறிவு விகிதம்
 77.90
இந்துக்கள்
 20,40,989
கிருத்தவர்கள்
 2,18,033
 இஸ்லாமியர்
1,56,345
புவியியல் அமைவு
அட்சரேகை
 100-110.30 N
தீர்க்கரேகை
 770-45-780.50E

இணையதளம்:
www.trichy.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrtry@tn.nic.in
தொலைபேசி: 0431-2416358

எல்லைகள்: கிழக்கில் தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டங்களும்; வடக்கில் சேலம், பெரம்பலூர் மாவட்டங்களும், மேற்கில் நாமக்கல் மாவட்டமும்; திண்டுக்கல் மதுரை மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: இன்றைய திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியான உறையூர் கி.மு. 300-லிருந்து சோழர்களின் தலைநகரமாக விளங்கியதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன.

களப்பிரர் காலத்திலும் (கி.பி. 300-575) உறையூர் சோழர்களின் கீழ் இருந்திருக்கலாமென வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

கி.பி. 590-இல் முடிசூடிய முதலாம் மகேந்திரவர்மர் காலத்தில் உறையூரும், இன்றைய திருச்சிராப்பள்ளியின் பழைய பகுதிகளும் பல்லவராட்சியின் கீழ் வந்தன. கி.பி. 880 வரை இப்பகுதி பல்லவர், பாண்டியர் ஆட்சியின் கீழ் மாறி மாறி இருந்தது.

கி.பி. 880-இல் ஆதித்த சோர் பெற்ற வெற்றி இப்பகுதியைச் சோழப் பேராட்சியில் கீழ் கொண்டு வந்தது.  கி.பி. 1225-இல் ஹொய்சால மன்னர்களால் கையகப்படுத்தப்பட்டு, பின்பு இரண்டாம் பாண்டிய பேர்ரசின் கீழ் சில ஆண்டுகள் இருந்த திருச்சிராப்பள்ளி, முகமதியர்களின் ஆட்சிக்குட்பட்டது.

நாயக்கர்கள், விஜய நகர அரசர்களின் முகவர்களாக இப்பகுதியை ஏறத்தாழ 1736 வரை ஆண்டார்கள்.  அரசி மீனாட்சியுடன் நாயக்ககராட்சி முடிவுற்றது.

தொடர்ந்து முகமதியர் ஆட்சி, ஆற்காடு நவாபுகளின் மரபில் வந்த சந்தாசாகிபு, முகமதலி போன்றோரின் கையில் சில ஆண்டுகள் இருந்த இப்பகுதி, இறுதியில் ஆங்கில ஆட்சிக்குட்பட்டது.

நில அடிப்படையில் தமிழகத்தின் மையமாக விளங்கும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் 1995, செப்டம்பர் 30 ஆம் தேதி மூன்றாகப் பிரிக்கப்பட்டது.  (திருச்சிராப்பளி, கரூர் மற்றும் பெரம்பலூர்)

முக்கிய ஆறுகள்: காவிரி, அரியார், கோரையார், அய்யாறு, நந்தலாறு, ஊப்பாறு.

நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள் - 3: திருச்சி, லால்குடி, முசிறி
தாலுகாக்கள் - 8: திருச்சி, மணப்பாறை, முசிறி, லால்குடிஇ, துறையூர், ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், தொட்டியம்
மாநகராட்சி-1: திருச்சி,
நகராட்சிகள்-3: மணப்பாறை, துறையூர், தூத்துக்குடி.
ஊராட்சி ஒன்றியங்கள் -14: அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், மண்ணச்ச நல்லூர், முசிறி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, லால்குடி, புள்ளம்பாடி, மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி, உப்பியாபுரம், துறையூர்.

குறிப்பிடத்தக்க இடங்கள்

மலைக்கோட்டை: உலகின் மிகப்பழமையான பாறை (3800 மில்லியன் ஆண்டுகள் பழமை) என்ற சிறப்புடைய இது 83. மீ. உயரம் கொண்டது.

உச்சிப்பிள்ளையார் கோவில்: மலைக்கோட்டையில் 344 படிகளைக் கடந்து ஏறிச்சென்றால் இக்கோயிலை தரிசிக்கலாம்.

கல்லணை: கரிகால் பெருவளத்தானால் கட்டப்பட்ட கல்லணை பண்டைத் தமிழர்களின் பொறிய்யியல் திறனுக்கு சான்றற பகர்ந்து நிற்கிறது.

ஏரக்குடி சிறுநாவலூர்: நவாப் காலத்தில் கட்டப்பட்ட அழகிய தானியக் களஞ்சியம்.

ஸ்ரீரங்கம் ராகவேந்தரர் மடம்: 

இங்கே ராகவேந்திர்ரின் வாழ்க்கை வரலாறு ஓவியங்களாகத் தீட்டபட்டுள்ளது.

இருப்பிடமும் சிறப்பியல்களும்:

இருப்பிடமும், சிறப்புகளும்
சென்னையிலிருந்து 316 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன.
விமான நிலையம்வானொலி நிலையம் அமைந்துள்ளது.
தாயுமானவர் வாழ்ந்த பூமி.
துப்பாக்கித் தொழிறைசாலையும்பொன் மலை இரயில்வே பணினையும்தேசிய தொழில் நுட்ப கல்வி நிறுவனம் (என்.ஐ.டி)N.I.T இந்நகரின் தனிச் சிறப்பு.
புத்த மதம் செழித்த பூமி.
முக்கிய கனிமங்கள்சுண்ணாம்புக்கல்குவார்ட்ஸ் மற்றும் பெல்ஸ்பார்ஜிப்சம்வெள்ளைக் களிமண்கார்னட்.
திருக்கோகர்ணேஸ்வரர் ஆலையம்: இது மகேந்திர வர்ம பல்லவன் காலத்தில் கட்டபட்ட குடைவரைக் கோயில்.
பெல்(BHEL) - மின்சார உற்பத்திக்கான பாய்லர்களை தயாரிக்கும் நிறுவனம் 2008 இல் இதன் வருமானம் ரூ.7500 கோடி.
பேப்ரிகேஷன் துறையின் மையம் என்ற சிறப்பு பெற்றுவருகிறது.
மத்திய அரசின் படைக்கலத் தொழிற்சாலை.


பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் பின்னூட்டம் இடவும். எமது மாவட்டங்களின் கதைகள் வரிசையில் அடுத்த மாவட்டம் 
திருநெல்வேலி மாவட்டம்.


www.thangampalani.com thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக