புதன், 7 மார்ச், 2012

கரூர் மாவட்டம்


மாவட்டங்களின் கதைகள் - கரூர் மாவட்டம் (Karur)


கரூர் மாவட்டம்

பேருந்துகளை வடிவமைக்கும் Body Building தொழிலுக்கு பெயர் பெற்ற இடம்.


தலைநகர்
 கரூர்
பரப்பு
 2,396 .கி.மீ
மக்கள்தொகை
 9,36,686
ஆண்கள்
 4,68,538
பெண்கள்
 4,70,148
மக்கள் நெருக்கம்
 323
ஆண்-பெண்
 1,010
எழுத்தறிவு விகிதம்
 68.08%
இந்துக்கள்
 8,83,584
கிருத்தவர்கள்
 13,863
இஸ்லாமியர்
 37,272


புவியியல் அமைவு
அட்சரேகை
 110-120N
தீர்க்க ரேகை
 770.28-780.50E


இணையதளம்: 
www.karur.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்

மின்னஞ்சல் : collrkar@tn.nic.in
தொலைபேசி: 04324-257555


எல்லைகள்: இதன் வடக்கில் நாமக்கல் மாவட்டமும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் முசிறி தாலுகாவும், கிழக்கில் திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களுக்ம், தெற்கில் சிவகங்கை, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களும், மேற்கில் திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: சங்ககால சேர்ர்களின் தலைநகரமாகக் கருதப்படுகிறது. (கருவூர்/வஞ்சி) கிரேக்க அறிஞர் தாலமி கரூரை தமிழகத்தின் உள்நாட்டு முக்கிய வாணிப மையமாக குறிப்பிடுகிறார்.

துவக்கத்தில் சேர, சோழ, பல்லவ, நாயக்கர் ஆட்சிக்குட்பட்டது.  1783இல் திப்பு சுல்தானுடன் ஏற்பட்ட போரில் பிரிட்ஷார் கரூர் கோட்டையை அழித்தனர்.  (ராயனூர் அருகே ஆங்கில - மைசூர் போரில் உயிரிழந்த வீர்ர்களுக்காக ஒரு நினைவில்லம் உள்ளது)

பிரிட்டீஷ் ஆட்சியில் துவக்கத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்துடனும் இணைந்திருந்த்து.

1995-இல் திருச்சி மாவட்டம் பெரம்பலூர், கரூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டபோது கரூர் புதிய மாவட்டமாக உதயமானது.

முக்கிய ஆறுகள்: காவிரி, அமராவதி, நொய்யல், குடகனாறு, கீழ் பவானி, நங்காஞ்சி ஆறு


நிர்வாகப் பிரிவுகள்

வருவாய் கோட்டங்கள் - 2; கரூர், குளித்தலை.
தாலுகாக்கள் - 4; கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணாராயபுரம்,
நகராட்சிகள்-4: குளித்தலை, கரூர், இனாம் கரூர், தாந்தோணி
ஊராட்சி ஒன்றியங்கள் - 8; கரூர், தாந்தோணி, கே.பரமத்தி, அரவக்குறிச்சி, குளித்தலை, தோகைமலை, கிருஷ்ணராயபுரம், கடவூர்.

குறிப்பிடத்தக்க இடங்கள்

பசுபதேஸ்வரர் ஆலயம்: சிலவத் தலங்கள் ஏழில் ஒன்றாக்க் கருதப்படுகிறது.  ஐந்தடி உயர சிவலிங்கத்தின் மீது மடி சொரியும் பசுவும் ரங்கமாதா சிறபமும் கலை எழில் கொண்டவை.

கல்யான வெங்கடராமசாமி ஆலயம்: கரூரிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவிலுள்ள தாந்தோணி மலையில் சிறு குன்றின் மேல் அமைந்துள்ள இக்கோயில் 'தென் திருப்தி' என அழைக்கப்படுகிறது.

புகளூர் காகிதத்  தொழிற்சாலை: மரக்கூழைப் பயன்படுத்தாமல் தாள் தயாரிக்கும் தொழிற்சாலை.  இந்தியாவிலேயே மிகப் பெரியதாகக் கருதப்படுகிறது.

செட்டிநாடு சிமென்ட் ஆலை: மாவட்டத்தின் புலியூர் பகுதியில் அமைந்துள்ளது.  1962 இல் துவக்கப்பட்ட இத் - தொழிற்சாலை, பின்னலாடை மற்றும் பிற தொழில்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

வழிபாட்டிடங்கள்: ஐயர் மலை - குளித்தலை, கடம்பர் கோவில், மாரியம்மன் கோவில்.

இருப்பிடமும், சிறப்புகளும்


Ø     சென்னையிலிருந்து தென்மேற்கே 371 கி.மீதொலைவில் அமைந்துள்ளது.
Ø    குடிசைத் தொழில்கள்நவீன அரசி ஆலைகள்பருத்திபித்தளைப் பாத்திர தயாரிப்புபோன்றவற்றிற்கு பெயர் பெற்றது
Ø    சுண்ணாம்புக்கல்ஜிப்சம்வெள்ளைக் களிமண் போன்ற கனிமங்கள் நிறைந்த்து.
Ø    1942 இல் துவங்கப்பட்ட ஈஐடி பாரி நிறுவனம்சர்க்கரை உற்பத்தியில் உலகளவில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
Ø    செட்டிநாடு சிமென்ட் ஆலைதமிழ் நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.
Ø    செட்டிநாடு சிமென்ட் ஆலைதமிழ்நாடு ஆஸ்பெஸ்டாஸ் ஆலைகள் குறிப்பிடத்தக்கவை.
Ø    ஏற்றுமதி தரத்திலான கொசுவலை உற்பத்திக்கு புகழ்பெற்றது.
Ø    கைத்தறியாடைகளுக்குப் புகழ்பெற்ற மாவட்டம்.
Ø      அனைத்து வாகனங்களுக்கும் தேவையான செயின் தொழிற்சாலை இங்குள்ளது.  தமிழ்நாடுமட்டுமல்லாது அண்டை மாநிலத்திலிருந்தும் பேருந்து பாடி கட்ட இங்கு வருகிறார்கள்.

எமது அடுத்த 'மாவட்டங்களின் கதைகள்' வரிசையில் வர இருப்பது தமிழ்நாட்டில் இயற்கை ரப்பர் உற்பத்தி செய்யும் ஒரே மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய பதிவு. எதிர்பாருங்கள் நண்பர்களே..!


தொடர்புடைய பதிவுகள்:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக