வியாழன், 8 மார்ச், 2012

திருப்பூர் மாவட்டம்



மாவட்டங்களின் கதைகள் - திருப்பூர் மாவட்டம்



திருப்பூர் மாவட்டம்

இந்தியாவின் பின்னலாடைத் தலைநகரம் (Knitewar Capital)


அடிப்படைத்தகவல்கள்
தலைநகர்
 திருப்பூர்
மக்கள்தொகை
 3,46,551
ஆண்கள்
 52%
பெண்கள்
 46%
எழுத்தறிவு விகிதம்
 76%
புவியியல் அமைவு
அட்சரேகை
 110.10.750N
தீர்க்க ரேகை
 770.33.980E



இணையதளம்
www.tirupur.tn.inc.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrtup@tn.nic.in
தொலைபேசி: 1421-2218811
எல்லைகள்: இதன் வடக்கே ஈரோடு மாவட்டமும், மேற்கில் கோயம்புத்தூர் மாவட்டமும்,கிழக்கு மற்றும ்தெனி கிழக்கில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களும், மென்மேற்கில் கேரள மாநிலத்தின் சிறு பகுதியும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: திருடுபோன பாண்டவர்களின் கால்நடைச் செல்வங்கள் 'திருப்பியும் கிடைத்த ஊர்' என்பதால் இதற்ககுதிருப்பூர் எனப் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து திருப்பூர், அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கேயம், உடுமலைப் பேட்டை தாலுகாக்களைப் பிரித்து 2008 அக்டோபரில் திருப்பூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
தமிழகத்தின் 32 ஆவது மாவட்டம்

முக்கிய ஆறுகள்: நொய்யல், அமராவதி, வாஞ்சிப்பாளையம், கூலிப்பாளையம், ஊத்துக்குளி, சோமனூர்.

குறிப்பிடத்தக்க இடங்கள்

திருப்பூர்: முக்கிய வணிக மையம்.  பனியன் பின்னலாடைத் தொழிலுக்கு உலகப் புகழ் பெற்றது.  வருடத்திற்கு ரூ. 12,000 கோடி மதிப்பிற்கு ஏற்றுமதி.

உடுமலைப்பேட்டை: மூன்று பக்கமும் மலைகளால் (மேற்குத் தொடர்ச்சி மலை) சூழப்பட்ட தொழில் நகரம்.  டெக்ஸ்டைல், காகிதம், விவசாயச் சார்ப்பு தொழிற்சாலைகள் மிகுதி.  திருமூர்த்தி அணைக்கட்டு, அமராவதி அணைக்கட்டு குறிப்பிடத்தக்க சுற்றுலா மையங்கள்.
வால்பாறை: கோயம்புத்தூரிலிருந்து 15.கி.மீ.தூரத்தில் அமைந்துள்ள வால்பாறை பச்சைப்புல் சூழ்ந்த அருமையான சுற்றுலாத்தலம்.

திருமுருகன்பூண்டி: கருங்கல் சிற்பத் தொழிலளளர்கள் நிறைந்த ஊர்.  சுமார் 250 குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.  இங்கு உருவாக்கப்படும் சிற்பங்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
தொழிற்சாலைகள்

C&A, Walmart, Switcher, Diesel, Aemy, tommy, Hilfiger, M%S, FILA, H&M, Reebok, VACUE -திருப்பூரிலிருந்து ஆடைகளை இறக்குமதி செய்யும் சில பன்னாட்டு நிறுவனங்கள்.

பன்னாட்டு நிறுவனங்கள் தள்ளுடி செய்த துணித் தரங்களை விற்பனை செய்யும் காதர் பேட்டை பகுதி குறிப்பிடத்தக்கது.


சிறப்புகள்
கடல் மட்டத்திலிருந்து 310மீஉயரத்தில் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் ஒரே சைனிக் பள்ளி அமராவதி நகரில் அமைந்துள்ளது.
மாமுனிவர் அகஸ்தியரால் புகழ்பெற்ற இடம் ஊத்துக்குளி
அமராவதி முதலைப் பண்ணையில் நூற்றுக்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன.
டெக்ஸ்டைல் நகரம்
அண்ணாதுரை தனது அரசியல் குரு .வெ.ராபெரியாரை முதன்முதலாக சந்தித்தஇடம் திருப்பூர்.
அருகிலுள்ள விமான நிலையம் கோயம்புத்தூர்
முப்பதுக்கும் அதிகமான திரையரங்குகள் உள்ளன.
தீரன் சின்னமலை பிரிட்டீஷாருக்கு எதிராகப் போராடிசங்ககிரி கோட்டையில்தூக்கிலிடப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர்.



நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள்: தாராபுரம், திருப்பூர்.
தாலுகாக்கள்: திருப்பூர், அவினாசி, பல்லடம், தாராபுரம், காங்கேயம், உடுமலைப்பேட்டை
மாநகராட்சி-1: திருப்பூர்
நகராட்சிகள்-6: நல்லூர், தாராபுரம், பல்லடம், உடுமலைப்பேட்டை, வேலம்பாளையம், வெள்ளக்கோவில்,
ஊராட்சி ஒன்றியங்கள் - 13: அவிநாசி, தாராபுரம், குடிமங்கலம், காங்கேயம், குண்டாட்டம், மடத்துக்களும், மூவனூர், பல்லவடம், பொங்கலூர், திருப்பூர் உடுமலைப்பேட்டை ஊத்துக்குளி, வெள்ளக்கோவில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக