ஆலம்பரா கோட்டை - கடப்பாக்கம் (Alambara Fort )
ஆலம்பரா கோட்டை...
ஈசிஆர் ரோட்டில் முதலியார் குப்பம் படகு இல்லம் சென்று விட்டு அடுத்து எங்காவது
பீச்சுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து போனது கடப்பாக்கம் என்கிற ஒரு சின்ன
கடற்கரை கிராமத்திற்கு..சுனாமியால் பாதிக்கப்பட்டு இன்னும் முழுமை அடையாமல்
இருக்கிறது இந்த ஊர்.சென்னையில் இருந்து பாண்டி செல்லும் ஈசிஆர் ரோட்டில் இருந்து
இடது பக்கம் திரும்பினால் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் கடற்கரையை
அடையலாம்.
கடற்கரை வரை சென்று இறங்கியவுடன் நம்மை வரவேற்பது மீன் கவிச்சியும், காய
வைத்துள்ள மீன் கருவாடும்... அப்புறம் நல்ல கடல் காற்றும்.
ஆட்களின் நடமாட்டம் அதிகம் இல்லாமல் நன்றாக அமைதியாக இருக்கிறது இந்த கடலோர பகுதி.மீனவர்களின் கட்டுமரங்கள் நிறைய இருக்கின்றன. காய்ந்து போன மீன்களின் முள் கூடுகள் நிறைய கிடக்கின்றன.கொஞ்சநேரம் பீச் மணலில் நடந்து விட்டு பார்க்கையில் ஒரு சிதிலமடைந்த கோட்டை நம் கண்ணுக்கு புலப்பட என்னவென்று கேட்க ஆலம்பரா கோட்டை என்றும் திப்பு சுல்தான் கோட்டை என்றும் சொன்னனர்.நடந்து செல்ல லேட்டாகும் என்பதால் வண்டியில் கோட்டைக்கு கிளம்பினோம்.கிராமத்தின் ஊடே செல்கிற ரோட்டில் சென்றோம்.நிறைய வீடுகள் சுனாமியால் பாதிக்கப்பட்டு இன்னும் அப்படியே இருக்கின்றன.
ஆலம்பரா கோட்டை ரொம்ப சிதிலமடைந்து காணப்படுகிறது என்பதை உணர்த்தும் விதமாகவே இக்கோட்டையின் பெயர் தாங்கிய போர்டும் மிக மோசமான நிலையில் இருக்கிறது.கோட்டையை அடைந்தோம். பேக் வாட்டரில் உள்ளபடி பாதி மணலில் புதைந்தபடி இதன் சுவர்கள் இருக்கின்றன.கோட்டை சுவர் இன்னும் பலம் மிக்க தாகவே இருக்கிறது.

மிகப்பெரிய பரப்பளவில் இக்கோட்டை அமைந்து இருந்தாலும் தற்போது சிதிலமடைந்து ஆங்காங்கே மண்ணில் புதைந்து இருந்தாலும் இந்த கோட்டையை ஆண்ட மன்னர்களின் வரலாற்றை, அவர்களுடைய பலத்தை பறை சாற்றுகிறது.இந்த கோட்டைக்கு நடுவில் ஒரு சமாதி இருக்கிறது.இது யாருடையது என்பதற்கான விவரம் தெரியவில்லை.ஆனால் இங்கு அதிகம் நடைபெறும் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகளின் பெயர்களை மட்டும் தெரிந்து வைத்து இருக்கிறார்கள் இங்குள்ள வாசிகள்.
வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த இடத்தில் கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு திரும்பினோம்..
நேசங்களுடன்
ஜீவானந்தம்
நேசங்களுடன்
ஜீவானந்தம்
kovaineram thanks

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக