வியாழன், 8 மார்ச், 2012

நாமக்கல் மாவட்டம்



மாவட்டங்களின் கதைகள் - நாமக்கல் மாவட்டம் - (Namakkal District - Tamilnadu)




நாமக்கல் மாவட்டம்

தமிழகத்தின் கோழிப்பண்ணை மாவட்டம்

அடிப்படைத் தகவல்கள்
தலைநகர்
 நாமக்கல்
பரப்பு
 3,363 .கி.மீ.
மக்கள்தொகை
 14,93,462
ஆண்கள்
 7,59,551
பெண்கள்
 7,33,911
மக்கள் நெருக்கம்
 439
ஆண்-பெண்
 966
எழுத்தறிவு விகிதம்
 67.41%
இந்துக்கள்
 14,51,966
கிருத்தவர்கள்
 13,137
இஸ்லாமியர்
 26,907


புவியியல் அமைவு

அட்சரேகை: 110-110.36N
தீர்க்க ரேகை: 770.28-780.30E

எல்லைகள்: இதன் கிழக்கே பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களும், மேற்கே ஈரோடு மாவட்டமும்: வடக்கே சேலம் மாவட்டமும், தெற்கில் கரூர் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: சேலம் மாவட்டத்தில் இருந்தது 1997, ஜனவரி ஒன்றாம் தேதி நாமக்கல் மாவட்டம் உருவாக்கபட்டது.

கனிமம்: மேக்னசைட், பாக்சைட், குவார்ட்ஸ், சுண்ணாம்புக்கல், கிரானைட்

முக்கிய ஆறுகள்: காவிரி

முக்கிய இடங்கள்: 

ஐயாறு: சித்தன் குட்டி மலை உச்சியில் தோன்றும் ஆரோச்சி ஆறு, காப்பபாடியாறு, மூலை, ஆறு, மாசிமலை அருவி, நக்காட்டடி ஆறு என்னும் ஐந்ததுஆறுகள் சங்கமித்து ஒன்றாக உருவெடுத்து வருவதால் இதற்கு  இப்பெயர் வந்தது.  4500 அடி உயரத்திலிருந்து வரும் இந்த ஆற்றுக்கு வெள்ளைப் பாழி ஆறு என்றும் பெயர் உள்ளது.  கொல்லிமலையின் பல இடங்களைத் தொடும் இந்த ஆறு, அங்குள்ள அரப்பள்ளீஸ்வரர் கோவிலுக்கு அப்பால் விழுந்து ஆகாச கங்கை எனப் பெயர் பெறுகிறது.  புளியஞ்சோலை என்னும் இடத்தில் காவிரியுடன் கலக்கிறது.

கொல்லிமலை ஆகாச கங்கை: சுமார் 1190 மீ. உயரமுள்ள கொல்லிமலை முழுவதும் மூலிகைகள் நிறைந்தது.  அரசு மூலிகைப் பண்ணை தாவரத்தோட்டம் உள்ளது.  ஆகாச கங்கையருவி மூலிகை மகத்துவம் மிக்கது. பல்வேறு சித்தர்கள் வாழ்ந்த குகைகள் உள்ளன.  ஆண்டுதோறும் இங்கு கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஓரிக்கு விழா நடத்தப்படுகிறது.

கொல்லிமலை - ஆகாச கங்கை


கொல்லிமலை - இயற்கை காட்சிகள்
கொல்லிமலையின் ஒரு பகுதி

பனிபடர்ந்த எழிலார்ந்த கொல்லிமலை


பனிபடர்ந்த கொல்லிமலை

நாமக்கல் ஆஞ்சநேயர்: ஒரே கல்லில் 200 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட அனுமன் கோயில்.





அர்த்தநாரீஸ்வரர் கோயில்: தமிழகத்தில் சிவபெருமான் அர்த்தநீஸ்வரராகக் காட்சியளிக்கும் ஒரே கோயில் இதுதான்.  இக்கோயில் மூலவரின் உயரம் ஐந்து அடி.  மூலவர் சிலையை சித்தர்கள் மூலிகைகளால் வடித்துள்ளதாகக் கருதப்படுகிறது.

திருச்செங்கோடு மலையின் முன் பகுதி தோற்றம்

கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவில்லம்:

இருபதாம் நூற்றாண்டு தமிழ்க் கவிஞர்களின் புகழ்பெற்ற இவ்விடுதலைவீரர் நினைவாக 2000 ஆண்டு திறக்கப்பட்டது.

நாமக்கல் கவிஞரின் நினைவில்லம் இப்போது நூலகமாக..
நாமக்கல் துர்க்கம் கோட்டை: உறுதிமிக்க இக்கோட்டைத் தூண் வரலாற்றுத் தொடர்ச்சியாக இம்மாவட்டத்தை அடையாளப்படுத்தி நிற்கிறது.
நாமக்கல் கோட்டை

நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள்: நாமக்கல், திருச்சிங்கோடு
தாலுகாக்கள்: -4: நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்தி, - வேலூர், இராசிபுரம்
நகராட்சிகள்- 5: நாமக்கல், திருச்செங்கோடு, குமாரபாளையம்,ராசிபுரம், பள்ளிப்பாளையம்

ஊராட்சி ஒன்றியங்கள்-15: எலச்சிப்பாளையம், எருமப்பட்டி, கபிலர்மலை, கொல்லிமலை,மல்ல முத்திரம், மோகனூர், நாமகிரிப்பேட்டை, நாமக்கல், பள்ளிப்பாளையம், பரமத்தி, புதுச்சத்திரம், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, வெண்ணந்தூர்.

இருப்பிடமும், சிறப்புகளும்: 

சென்னையிலிருந்து 370 கி.மீ. தொலைவில் உள்ளது.

பல்வேறு சித்தர்கள் வாழ்ந்த குகைகள் கொல்லிமலையில் உள்ளன.

தமிழகத்திலேயே அதிக மினிப் பேருந்துகள் இயங்கும் மாவட்டம் இது.

கோழிப்பண்ணைத் தொழில் முக்கியமானது.

லாரித் தொழிலும் சிறப்பாக நடைபெறுகிறது.

கொல்லிமலை, ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி

திருச்செங்கோடு காந்தி ஆஸ்ரமம்

முக்கிய தொழில்கள்:  சங்ககிரி இந்தியா சிமெண்ட் தொழிற்சாலை(Sankakiri Indian cement industry), திருச்செங்கோடு நூற்பாலைகள்(Textile Thiruchengode), குமாரபாளையம் சோப்புத் தொழில். , kumarapalaiyam soap industry.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர்ர் கோயில், காளிப்பட்டி ஸ்ரீ கந்தசாமி கோவில், கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயில்.

குறிப்பிடத்தக்கோர்: தீரன் சின்னமலை, டாக்டர்.பி. சுப்பராயன், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை.

இடுகைத் தொடர்பான பொது அறிவு தகவல்கள்:

ஒரு சிலரை பட்டப்பெயர் வைத்து அழைப்பார்கள். அவ்வாறான பெயர்கள் மாவட்டங்களுக்கும் உண்டு.

ஒவ்வொரு மாவட்டங்கும் ஒரு அடைமொழி உண்டு.
இராமநாதபுரம்
 புனித பூமி
ஈரோடு
 வாணிப மையம்
கரூர்
 நெசவாளர்களின் வீடு
ஈரோடு
 வாணிப மையம்
கன்னியாகுமரி
 இந்தியாவின்  தென்நில எல்லை
காஞ்சிபுரம்
 ஆலைய நகரம்
கோயம்புத்தூர்
 தென்ன மான்செஸ்டர்
சிவகங்கை
 சரித்திரம் உறையும் பூமி
சென்னை
 தென்னிந்தியாவின் நுழைவாயில்
சேலம்
 மாம்பழ நகரம்
தஞ்சாவூர்
 தமிழக அரிசிக் கிண்ணம்
தரும்புரி
 தோட்டப்பயில் பூமி
திண்டுக்கல்
 பூட்டு நகரம்
திருச்சி
 மலைக்கோட்டை நகரம்
திருநெல்வேலி
 தென்னிந்திய ஆக்ஸ்ஃபோர்ட்
தூத்துக்குடி
 முத்து நகரம்


பதிவில் இருக்கும் படங்கள் அனைத்தும் Google search engine மூலம் திரட்டப்பட்டவை.
எமது அடுத்த மாவட்டங்களின் கதைகள் வரிசையில் வர இருப்பது நீலகிரி மாவட்டம். படிக்கத் தவறாதீர்கள் நண்பர்களே.. இந்த பதிவு பிடித்திருந்தால் பின்னூட்டம் இட மறக்காதீர்கள். அதேபோல் திரட்டிகளில் ஓட்டும் போடவும். நன்றி!!

மாவட்டங்களின் கதைகள் - திருச்சிராப்பள்ளி மாவட்டம்(Trichy)


www.thangampalani.com thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக