புதன், 7 மார்ச், 2012

அரியலூர் மாவட்டம்



மாவட்டங்களின் கதைகள் - அரியலூர் மாவட்டம்(Ariyalur)


- தொடர் பதிவு

மாவட்டங்களின் கதைகள் என்ற தொடரை ஆரம்பித்ததின் நோக்கமே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களைப் பற்றிய முக்கிய தகவல்களை அறியத்தருவதுதான்.. இந்த பதிவுகள் அனைத்தும் பொது அறிவுப் பகுதியில் வகைப்படுத்தப்படும். இப்பதிவுகள் ஒவ்வொன்றும் போட்டித் தேர்வுகள் எழுதுபவர்களுக்கு மட்டுமல்லாது ஏனையோர் அனைவருக்கும் பயன்படும் என்பதில் ஐயமில்லை..!!

மாவட்டங்களின் கதைகள் வரிசையில் நாம் அறியத்தரும் முதல் மாவட்டம் அரியலூர்.

சுருக்கமான தகவல்கள்:


தலைநகர்
 அரியலூர்
பரப்பு
 1,949.31
மக்கள் தொகை
 6,95,524
ஆண்கள்
 3,46763
பெண்கள்
 3,48761
மக்கள் நெருக்கம்
 358*
ஆண்-பெண்
 1,006**
எழுத்தறிவு விகிதம்
 65.08%
இந்துக்கள்
 6,50,988
கிருத்துவர்கள்
 36,261
இஸ்லாமியர்
 7,638

அரியலூர் மாவட்டத்திற்கான இணையதளம்

www.ariyalur.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்


மின்னஞ்சல்: collrari@tn.nic.in
தொலைபேசி: 04329-223351

எல்லைகள்(borders): இதன் வடக்கே கடலூர் மாவட்டம். தெற்கே தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்கள். மேற்கே பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்கள் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு(History): 1741 - இல் திருச்சி மீது படையெடுத்த மராட்டியர் சந்தா சாகிப்பை கது செய்தனர். 1748 இல் விடுதலையான சந்தா சாகிப், ஆர்க்காடு நவாப் அன்வர்தீன் மற்றும் அவரது மகன் முகமதலி ஆகியோருடன் மோதினார். இதையடுத்து அரியலூர் மற்றும் உடையார்பாளையம் பாளையங்கள் முகமதிலியின் ஆதிக்கத்திற்குள்ளானது.

திருச்சி பகுதி பிற்பாடு ஹைதர் அலி, திப்பு சுல்தான் பிரிட்டிஷார் மோதலின் களமானது. திப்புவின் மறைவையடுத்து 1801ல் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்போது திருச்சிராப்பள்ளி தனி மாநிலமா உருவாக்கப்பட்டது.

1995-ல் திருச்சி மாவட்டத்தலிருந்து பெரம்பலூர், கரூர் மாவட்டங்கள் உருவாக்கபட்டன.

2001 இல் பெரம்பலூர் மாட்டத்திலிருந்து உருவாக்கப்பட்ட அரியலூர் மாவட்டம் பிற்பாடு 2002 இல் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

2007, நவம்பர் 23 -ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து மீண்டும் புதிய அரியலூர் மாவட்டம் உருவாக்கபட்டது.

நிர்வாகப்பிரிவுகள்(Administrative divisions):

வருவாய் கோட்டங்கள் - 2: அரியலூர், உடையார்பாளையம், தாலுகாக்கள் - 3 ; அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம். நகராட்சிகள் - 2; அரியலூ, ஜெயங்கொண்டம்; ஊராட்சி ஒன்றியங்கள்- 6; அரியலூர், ஆண்டிமடம், செந்துறை, திருமானூர், தி. பாலூர், ஜெயங்கொண்டம்

முக்கிய ஆறுகள்(The main rivers): கொள்ளிடம், மருதியாறு, வெள்ளாறு.

முக்கிய நகரங்கள்(Major cities): அரியலூர், ஜெயங்கொண்டம்.

புகைவண்டி நிலையங்கள்(Railway Stations): அரியலூர், ஒத்தக்கோவில், வெல்லூர், செந்துறை, ஆர்.எஸ். மாத்தூர், ஈச்சங்காடு.

குறிப்பிடத்தக்க இடங்கள்(Notable locations)

திருமழபாடி வைத்தியநாத சுவாமி ஆலையம், கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோவில், ஜோஸப் பெஸ்கியால் (வீரமாமுனிவர்) கட்டப்பட்ட ஏலக்குறிச்சி தேவாலயம்.


கங்கை கொண்ட சோழபுரம்: புகழ்பெற்ற சோழ மன்னர் இராஜேந்திரச் சோழன், தனது வடநாட்டு வெற்றியின் நினைவாகக் கட்டிய கோவில். தஞ்சை பெரிய கோவிலின் மாதிரி வடிவத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலின் சிங்கத் தலைக்கொண்ட கிணறு மற்றும் அரசர் இராஜேந்திரருக்கு பார்வதி பரமேஸ்வரரே முடிசூட்டும் அரிய சிற்பங்களும், தஞ்சைப் பெரிய கோயிலைப் போன்ற மிகப்பெரிய நந்தி மற்றும் நாட்டியமாடும் விநாயகர் உட்பட அழகுமிகு சிற்பங்கள் நிறைந்துள்ளன.




மேலப்பழுவூர், தமிழ்த்துறவிகளின் சரணாலயமாகத் திகழ்ந்த ஊர். இங்குள்ள குடைவரை விஷ்ணுக்கோயில் காண்போர் மனதைக் கவரக்கூடியது.

இருப்பிடமும், சிறப்பியல்புகளும்:


    • சென்னைக்குத் தெற்கே 265 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
    • அணைக்கரைப் பாலம்: 150 வருட பழமையான இப்பாலம்கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இது தஞ்சாவூர் - கும்பகோணம் நகரங்களை சென்னை மார்க்கத்தில் இணைக்கிறது.
    • ஜெயம்கொண்டம் ஊரின் இயற்பெயர் நெல்லிமண கிராமம்.
    • கடற்கரை இல்லா உள் மாவட்டம்
    • சுண்ணாம்புக்கல்பாஸ்பேட்நிலக்கரி உள்ளிட்ட கனிம வளம் கொண்ட மாவட்டம்.
    • அரசு சிமெண்ட்(Arasu Cement)பிர்லா சிமெண்ட்(Birla Cement)சக்தி சிமென்ட்(Shakthi cement)டால்மியா சிமென்ட்(Dalmiya Cement)ராம்கோ சிமென்ட்(Ramko cement) ஆலைகளின் இருப்பிடமாக அரியலூர் விளங்குகிறது.
    • கரும்பு முக்கிய பணப்பயிர். கீழப்பாவூரில் ஒரு தனியார் சர்க்கரை ஆலை உள்ளது.
    • மாநிலத்தின் செம்மண் படிவங்கள் முந்திரிப் பயிர் சாகுபடிக்கு ஏற்றது.
    • வேட்டக்குடி கரைவெட்டி ஏரி பல்வேறு பறவையினங்கள் வந்து செல்லும் சரணாலயம்.
www.thangampalani.com thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக