புதன், 7 மார்ச், 2012

கன்னியாகுமரி


மாவட்டங்களின் கதைகள் - கன்னியாகுமரி ( Kanyakumari)


தமிழ்நாட்டில் இயற்கை ரப்பர் உற்பத்தி செய்யும் ஒரே மாவட்டம்
thiruvalluvar silaiஉலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய அய்யன் திருவள்ளுவருக்கு கடலுக்குள் அமைந்த பாறையின் மீது 133 அடி உயர சிலை அமைந்த மாவட்டம் கன்னியாகுமரி மாவட்டம்.

மாவட்டத்தைப் பற்றிய அரியதகவல்களை இங்கு காணலாம்.



தலைநகர்
 நாகர்கோவில்
பரப்பு
 1,672 .கி.மீ
மக்கள்தொகை
 16,76,034
ஆண்கள்
 8,32,269
பெண்கள்
 8,43,765
மக்கள் நெருக்கம்
 995
ஆண்-பெண்
 1,014
எழுத்தறிவு விகிதம்
 87,68%
இந்துக்கள்
 8,59,307
கிருத்தவர்கள்
 7,49,406
இஸ்லாமியர்கள்
 70,360
புவியியலமைவு
அட்சரேகை
 803-805N
தீர்க்கரேகை
 7705 - 77036

இணையதளம்
www.kanyankumari.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்

மின்னஞ்சல்: collrkkm@tn.nic.in
தொலைபேசி: 04652-279555
எல்லைகள்: இந்திய தீபகற்பத்தின் தென் மேற்கு முனையில் அமைந்துள்ளது. இதன் வடக்கு மற்றும் கிழக்கில் திருநெல்வேலி மாவட்டமும், தென் மேற்கே மன்னார் வளைகுடாவும், இந்தியப் பெருங்கடலும்: மேற்கு மற்றும் வடமேற்கில் கேரள மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: வேணாடு என்று வழங்கப்பட்ட இப்பகுதி வீர கேரளவர்மா காலத்தில் முழுவதுமாக திருவிதாங்கூர் ஆதிக்கத்தின் கீழ் வந்த்து. மதுரை விஸ்வநாத நாயக்கருக்கு சிறிது காலம் கப்பம் காட்டியது.

டச்சுகாரர்களுடன் நடைபெற்ற குளச்சல் போரில் மன்னர் மார்த்தாண்டவர்மா வெற்றி பெற்ற போதிலும்,மேற்கொண்டு அழிவுகள் ஏற்படாமல் தடுக்க சந்தா சாகிப்பிற்கு பெருந்தொகை கையூட்டமாக கொடுக்கப்பட்டது.

மார்த்தாண்டவர்மா காலத்திற்குப் பின் பிரிட்டீஷாரின் ஆதிக்கம். இது 1947 வரை தொடர்ந்த்து. 1947-இல் திருவிதாங்கூர் இந்திய யூனியனுடன் இணைந்தது. தொடர்ந்து 1951இல் கொச்சின், திருவிதாங்கூருடன் இணைக்கப்பட்டு திருவாங்கூர்-கொச்சின் என்றழைக்கப்பட்டது.

மொழிவாரி மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் அடிப்படையில், திருவாங்கூர்-கொச்சின் மாநிலத்தில் இருந்து அகஸ்தீஸ்வரம், தோவானை, கல்குளம், விளவங்கோடு என்னும்நான்கு தமிழ் பேசும் தாலுகாக்ககள் உள்ளடங்கிய கன்னியாகுமரி மாவட்டம் உருவானது. தொடர்ந்து 1956, நவம்பர் ஒன்றாம் தேதி தமிழகத்தின் ஒரு மாவட்டமானது.


நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள் - 2: நாகர்கோவில், பத்மநாபபுரம்.
தாலுகாக்கள் - 4: தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவ்கோடு,
நகராட்சிகள்: 4: நாகர்கோவில், குளச்சல், குழித்துறை, பத்மநாபபுரம், ஊராட்சி ஒன்றியங்கள் - 9:அக்ஸ்தீஸ்வரம், ராஜாக்க மங்கலம், தோவாளை, கிள்ளியூர், குருந்தன்கோடு,மேல்புறம், முஞ்சிறை, திருவாட்டார், தக்கலை.


குறிப்பிட்ட இடங்கள்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்: சுமார் 500 வருட பழமையான 'புற்றுமண்' கோயில். 'பெண்களின் சபரிமலை' எனவும் அழைக்கப்படுகிறது.

கேரளபுரம்: இங்குள்ள விநாயகர் சிலை ஆறு மாதம் கறுப்பாகவும், ஆறு மாதம் வெள்ளையாகவும் காட்சியளிக்கிறார்.

முக்கூடல்: நாகர்கோவில் நகராட்சிக்கு குடிநீர் வழங்குகிறது. இந்த அணையைக் கட்டியவர் சித்திரைத் திருநாள் மகாராஜா. சிறந்த சுற்றுலாத்தளம்.

சுசீந்திரம்: இசைத்தூண்கள், பெண் விநாகர், மும்மூர்த்திகள் ஒன்றிணைந்து காட்சியளிக்கும் தாணூமாலயன் 18 அடி உயர ஒற்றைக் கல் அனுமான் என பல்வேறு சிறப்பு கொண்டது.

வள்ளிமலை கோவில்: ஒன்றின் மேல் ஒன்றாக மூன்று அடுக்குகள் கொண்ட இக்கோவில் பல்லவர் மற்றும் நாயக்கர் கால கட்டடக் கலைபாணியில் அமைந்துள்ளது.

அய்யன் திருவள்ளுவர் சிலை: கடல் நீர் மட்டத்திலிருந்து 30 அடி உயரமுள்ள பாறை மீது அமைத்த 133 அடி உயர அய்யன் திருவள்ளவர்  சிலை கன்னியா குமரி மாவட்டத்தின் தனிச்சிறப்பு ஆகும்.


130 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையில், 38 அடி உயரமான பீடம் உள்ளது. இது  திருக்குறளின் 38 அதிகாரங்களை குறிப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.  பீடத்தின் மேல் உள்ள 95 அடி உயரம் கொண்ட சிலை திருக்குறளிலுள்ள 95 அதிகாரங்களையும் குறிக்கும் வகையில் அமைக்கப்படிருக்கிறது.


Thiruvalluvar statue from kaniyakumari in night
இரவு நேரத்தில் ஒளிரும் அய்யன் திருவள்ளுவர் சிலை

ayyan thiruvalluvar statue
133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை

மண்டபத்தில் உள்ளே இருக்கும் சுவற்றில் ஒவ்வொரு அதிகராத்திலிருந்தும்  ஒரு குறளைத் தேர்ந்தெடுத்து, மொத்தம் 133 குறட்பாக்கள் அதற்குரிய ஆங்கில மொழிப்பெயர்ப்புடன் பொறிக்கப்பட்டுள்ளது.

பிற இடங்கள்: கன்னியாகுமரி, பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி, நாகராஜா கோவில், கோட்டாறு சவேரியார் கோவில், தக்கலை ஞானி பீர் முகமது மசூதி.

இருப்பிடமும், சிறப்புகளும்


*      சென்னையிலிருந்து 689 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
*      மாவட்டத்தின் முக்கிய கோட்டைகள்த பத்பநாபபுரம் கோட்டை,மருந்துக்கோட்டைஉதயகிரிக்கோட்டைமருந்துக்கோட்டைமையக்கோட்டை.
*      மூலிகைச் செடிகள் மிகுந்த 'மருத்துவா மலைநாகர்கோவிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது.
*      குளச்சல் பழமையான இயற்கைத் துறைமுகம்
*      நாகர்கோவில் நகரத்தின் அடையாளச் சின்னமாக விளங்கும் மணிக்கூண்டு (மணி மேடை) 1893, ஆகஸ்டு 14 ஆம் தேதிதிருவிதாங்கூர் மன்னர் ஶ்ரீமூலம் திருநாளால் திறந்து வைக்கப்பட்டது. நாகர் கோவில் நகராட்சியின் அதிகாரபூர்வமுத்திரையாக பயன்பட்டுவருகிறது.
*      குறிப்பிட்டதக்கோர்: அதங்கோட்டாசான்கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,சதாவதானி செய்குதம்பி பாவலர்ஜீவானந்தர்நேசமணிஎன். எஸ். கிருஷ்ணன்.

படங்கள் உதவி: கூகுள்.காம்.


www.thangampalani.com thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக