வியாழன், 8 மார்ச், 2012

தூத்துக்குடி மாவட்டம்


மாவட்டங்களின் கதைகள் - தூத்துக்குடி மாவட்டம்(Thoothukudi))




தூத்துக்குடி மாவட்டம் 

முத்துக்குளியலுக்கு பெயர் பெற்ற துறைமுக நகரம்


அடிப்படைத் தகவல்கள்
தலைநகர்
 தூத்துக்குடி
பரப்பு
 4,621 ச.கி.மீ.
மக்கள்தொகை
 15,72,273
ஆண்கள்
 7,66,523
பெண்கள்
 8,05,450
மக்கள் நெருக்கம்
 340
ஆண்-பெண்
 1,050
எழுத்தறிவு விகிதம்
 81.52%
இந்துக்கள்
 12,35,718
கிருத்தவர்கள்
 2,62,718
இஸ்லாமியர்
 72,875



இணையதளம்: 

www.thoothukudi.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்

மின்னஞ்சல்: collrtut@tn.nic.in
தொலைபேசி: 0461-23406000

நிர்வாகப் பிரிவுகள்

வருவாய் கோட்டங்கள் - 3: தூத்துக்குடி, கோவில் பட்டி, திருச்செந்தூர், தாலுகாக்கள் - 8த தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திக்குளம், எட்டயபுரம். மாநகராட்சி - 1: தூத்துக்குடி. நகராட்சிகள் - 2: காயல்பட்டினம், கோவில்பட்டி. ஊராட்சி ஒன்றியங்கள் - 12: தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆழ்வார்நகரி, ஸ்ரீ வைகுண்டம், கருங்குளம், உடன்குடி, சாத்தான் குளம், ஒட்டப்பிடாரம், விளாத்திக்குளம், புதூர், கோவில்பட்டி, கயத்தாறு.

எல்லைகள்: தமிழகத்தின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள மாவட்டம்.  இதன் வடங்கே திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களும்; கிழக்கு மற்றும ்தெற்கில் மன்னார் வளைகுடாவும்ந மேற்கு மற்றும் தென் - மேற்கே திருநெல்வேலி மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: திருநெல்வேலி மாவட்டலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, 1985 அக்டோபர் 20-இல் தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

குறிப்பிடதக்க இடங்கள்

கட்டபொம்மன் நினைவுக்கோட்டை: மாவீரன் கட்டப்பொம்மன் நினைவாக 1974 இல் கட்டப்பட்டது.  கட்டப்பொம்மனின் குலதெய்வமான ஜக்கம்மா கோயிலும் இங்குள்ளது.

கயத்தாறு: 1799-இல் இங்குள்ள ஒரு புயிலமரத்தில்தான் கட்டபொம்மனை ஆங்கிலேயர் தூக்கிலேற்றினர்.

குலசேகரப்பட்டினம்: அழகிய கடற்கரை கிராம்ம். முத்தாரம்மன் கோயில் புகழ்மிக்கது.

மணப்பாடு: இங்குள்ள ஆதிகால ரோமன் கத்தோலிக்கத் தேவாலயம் பிரபலமானது. இங்குள்ள சிலுவை ஜெருசலேத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக்க் கூறப்படுகிறது.

ஆதிச்சநல்லூர்: தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள மிகத் தொன்மையான ஊர். சுடுமண் பாத்திரங்களும், முதுமக்கள் தாழிகளும் தொல்பொருள் ஆய்வுத் துறையால் கண்டெடுக்கபட்டுள்ளன.  தற்போது தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

எட்டயபுரம்: மகாகவி பாரதியாரால் பெருமை பெற்ற ஊர். பாரதியாருக்கு மணி மண்டபமும் (எழுத்தாளர் கல்கியால் கட்டப்பட்டது) உமறுப்புலவருக்கு தனி நினைவிடமும் இங்குள்ளது.  'இலச நாடு' என்பது இதன் பழைய பெயர்.  1565 ஆம் ஆண்டு முதல் எட்டயபுரம் என அழைகப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டபதி குடிகொண்டிருக்கும் வைணவத்தலம். திருநெல்வேலியிலிருந்து 30 கி.மீ. தொலைவு.

வழிபாட்டிடங்கள்: திருச்செந்தூர் முருகன் ஆலையம். கழுகு மலை முருகன் ஆலையம், நவ திருப்பதிகள்.

சரணாயலயமும் விலங்குகளும்

முதுமலை - யானை
கிண்டி தேசியப்பூங்கா - மான்
முண்டந்துறை - புலி
களக்காடு - சிங்கவால் குரங்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் - அணில்
விராலிமலை - மயில்
வேடந்தாங்கல் - அயல்நாட்டுப் பறவைகள்
ஆனைமலை - ஹெட்கேகோக்
முக்குறுத்தி - புலி

இருப்பிடமும், சிறப்புகளும்

சென்னையிலிருந்து 580 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இங்குள்ள மக்கள் பாரம்பரியத் தொழிலான உப்பு தயாரிப்பை தங்கள் தொழிலாக கொண்டுள்ளனர்.

சரக்குப் பெட்டகங்களை கையாள்வதில் நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம்.

ஸ்பிக்(SPIC), இராசயன தொழில்சாலை(CHEMICAL FACTORY) மற்றும் அணு ஆற்றல் தயாரிக்க உதவும் கனநீர் தொழிற்சாலை(Heavy water plant), மின் ஆலை(Power plant) போன்றவை குறிப்பிடத்தக்க தொழிற்சாலைகள்.

உமறுப்புலவர், பாரதியார் பிறந்த மண்.

www.thangampalani.com thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக