வியாழன், 8 மார்ச், 2012

தூத்துக்குடி மாவட்டம்


மாவட்டங்களின் கதைகள் - தூத்துக்குடி மாவட்டம்(Thoothukudi))




தூத்துக்குடி மாவட்டம் 

முத்துக்குளியலுக்கு பெயர் பெற்ற துறைமுக நகரம்


அடிப்படைத் தகவல்கள்
தலைநகர்
 தூத்துக்குடி
பரப்பு
 4,621 ச.கி.மீ.
மக்கள்தொகை
 15,72,273
ஆண்கள்
 7,66,523
பெண்கள்
 8,05,450
மக்கள் நெருக்கம்
 340
ஆண்-பெண்
 1,050
எழுத்தறிவு விகிதம்
 81.52%
இந்துக்கள்
 12,35,718
கிருத்தவர்கள்
 2,62,718
இஸ்லாமியர்
 72,875



இணையதளம்: 

www.thoothukudi.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்

மின்னஞ்சல்: collrtut@tn.nic.in
தொலைபேசி: 0461-23406000

நிர்வாகப் பிரிவுகள்

வருவாய் கோட்டங்கள் - 3: தூத்துக்குடி, கோவில் பட்டி, திருச்செந்தூர், தாலுகாக்கள் - 8த தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திக்குளம், எட்டயபுரம். மாநகராட்சி - 1: தூத்துக்குடி. நகராட்சிகள் - 2: காயல்பட்டினம், கோவில்பட்டி. ஊராட்சி ஒன்றியங்கள் - 12: தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆழ்வார்நகரி, ஸ்ரீ வைகுண்டம், கருங்குளம், உடன்குடி, சாத்தான் குளம், ஒட்டப்பிடாரம், விளாத்திக்குளம், புதூர், கோவில்பட்டி, கயத்தாறு.

எல்லைகள்: தமிழகத்தின் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள மாவட்டம்.  இதன் வடங்கே திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களும்; கிழக்கு மற்றும ்தெற்கில் மன்னார் வளைகுடாவும்ந மேற்கு மற்றும் தென் - மேற்கே திருநெல்வேலி மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: திருநெல்வேலி மாவட்டலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, 1985 அக்டோபர் 20-இல் தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டது.

குறிப்பிடதக்க இடங்கள்

கட்டபொம்மன் நினைவுக்கோட்டை: மாவீரன் கட்டப்பொம்மன் நினைவாக 1974 இல் கட்டப்பட்டது.  கட்டப்பொம்மனின் குலதெய்வமான ஜக்கம்மா கோயிலும் இங்குள்ளது.

கயத்தாறு: 1799-இல் இங்குள்ள ஒரு புயிலமரத்தில்தான் கட்டபொம்மனை ஆங்கிலேயர் தூக்கிலேற்றினர்.

குலசேகரப்பட்டினம்: அழகிய கடற்கரை கிராம்ம். முத்தாரம்மன் கோயில் புகழ்மிக்கது.

மணப்பாடு: இங்குள்ள ஆதிகால ரோமன் கத்தோலிக்கத் தேவாலயம் பிரபலமானது. இங்குள்ள சிலுவை ஜெருசலேத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக்க் கூறப்படுகிறது.

ஆதிச்சநல்லூர்: தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள மிகத் தொன்மையான ஊர். சுடுமண் பாத்திரங்களும், முதுமக்கள் தாழிகளும் தொல்பொருள் ஆய்வுத் துறையால் கண்டெடுக்கபட்டுள்ளன.  தற்போது தொல்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

எட்டயபுரம்: மகாகவி பாரதியாரால் பெருமை பெற்ற ஊர். பாரதியாருக்கு மணி மண்டபமும் (எழுத்தாளர் கல்கியால் கட்டப்பட்டது) உமறுப்புலவருக்கு தனி நினைவிடமும் இங்குள்ளது.  'இலச நாடு' என்பது இதன் பழைய பெயர்.  1565 ஆம் ஆண்டு முதல் எட்டயபுரம் என அழைகப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டபதி குடிகொண்டிருக்கும் வைணவத்தலம். திருநெல்வேலியிலிருந்து 30 கி.மீ. தொலைவு.

வழிபாட்டிடங்கள்: திருச்செந்தூர் முருகன் ஆலையம். கழுகு மலை முருகன் ஆலையம், நவ திருப்பதிகள்.

சரணாயலயமும் விலங்குகளும்

முதுமலை - யானை
கிண்டி தேசியப்பூங்கா - மான்
முண்டந்துறை - புலி
களக்காடு - சிங்கவால் குரங்கு
ஸ்ரீவில்லிபுத்தூர் - அணில்
விராலிமலை - மயில்
வேடந்தாங்கல் - அயல்நாட்டுப் பறவைகள்
ஆனைமலை - ஹெட்கேகோக்
முக்குறுத்தி - புலி

இருப்பிடமும், சிறப்புகளும்

சென்னையிலிருந்து 580 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இங்குள்ள மக்கள் பாரம்பரியத் தொழிலான உப்பு தயாரிப்பை தங்கள் தொழிலாக கொண்டுள்ளனர்.

சரக்குப் பெட்டகங்களை கையாள்வதில் நாட்டின் இரண்டாவது பெரிய துறைமுகம்.

ஸ்பிக்(SPIC), இராசயன தொழில்சாலை(CHEMICAL FACTORY) மற்றும் அணு ஆற்றல் தயாரிக்க உதவும் கனநீர் தொழிற்சாலை(Heavy water plant), மின் ஆலை(Power plant) போன்றவை குறிப்பிடத்தக்க தொழிற்சாலைகள்.

உமறுப்புலவர், பாரதியார் பிறந்த மண்.

www.thangampalani.com thanks

புதுக்கோட்டை மாவட்டம்


மாவட்டங்களின் கதைகள் - புதுக்கோட்டை மாவட்டம்( pudukkottai district)


புதுக்கோட்டை மாவட்டம்

மன்னராட்சியின் சுவடுகளைத் தாங்கிய வரலாற்று நகரம்.

அடிப்படைத் தகவல்கள்
தலைநகர்
 புதுக்கோட்டை
பரப்பு
 4,663 ச.கி.மீ.
மக்கள்தொகை
 14,59,601
ஆண்கள்
 7,4,300
பெண்கள்
 7,35,301
மக்கள் நெருக்கம்
 314
ஆண்-பெண்
 1,015
எழுத்தறிவு விகிதம்
 71.12
இந்துக்கள்
 12,94,101
கிருத்தவர்கள்
 66,432
இஸ்லாமியர்
 97,723



புவியியல் அமைவு

அட்சரேகை: 90.50-100N
தீர்க்கரேகை: 780.25-790.15E

இணையதளம்

http://www.pudukkottai.nic.in/
ஆட்சியர் அலுவலகம்

மின்னஞ்சல்: collrpdk@tn.nic.in
தொலைபேசி: 04322-221663

நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள்-2: புதுக்கோட்டை அறந்தாங்கி
தாலுகாக்கள்-11: இலுப்பூர், மணம் மேல் குடி, கந்தர்வக் கோட்டை, குளத்தூர், ஆவலங்குடி, திருமயம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார் கோவில், கரம்பக்குடி, பொன்னமராவதி
நகராட்சிகள்-2: புதுக்கோட்டை, அறந்தாங்கி
ஊராட்சி ஒன்றியங்கள்-13: அறந்தாங்கி, கந்தவர்க்கோட்டை, ஆவுடையார் கோவில், கரம்பக்குடி, பொன்னமராவதி, மணல்மேல்குடி, திருவரன் குளம், புதுக்கோட்டை, அரிமனம், குன்னாந்தார் கோவில், திருமயம், விராலிமலை.

எல்லைகள்: இதன் வடக்கு மற்றும் மேற்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், வடகிழக்கில் தஞ்சாவூர் மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், தெற்கில் சிவகங்கை மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: துவக்கத்தில் களப்பிரர் , பாண்டியர் (கடுங்கோன் பாண்டியன்), கொடும்பாளூர் வேளிர், பல்லவர், சோழர் ஆட்சிகளுக்கு உட்பட்டிருந்தது. பிற்பாடு மாலிக்காபூர் படையெடுப்பும், அதையடுத்து உருவான மதுரை சுல்தானியமும், விஜயநகர ஆட்சியும், புதுக்கோட்டையை தமது ஆதிக்கத்திற்குட்படுத்தின.

17-ஆம் நூற்றாண்டில் நடுப்பகுதியில் ஆட்சிக்கு வந்த தொண்டைமான்களின் ஆட்சி, இந்திய சுதந்திரம் வரைத் தொடர்ந்தது.

1948- மார்ச் 4-ம் தேதி புதுக்கோட்டை சாம்ராஜ்யம் இந்திய யூனியனில் இணைப்பட்டது. (திருச்சி மாவட்டத்துடன்).

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து முன்னால் புதுக்கோட்டைப் பகுதியும், தஞ்சாவூர் மாவட்டத்தின் சில பகுதிகளும் இணைக்கப்பட்டு, 1974, ஜனவர் 14-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

குறிப்பிடத்தக்க இடங்கள்

அறந்தாங்கி: புதுக்கோட்டை அடுத்த பெரிய நகர். இங்குள்ள சிதைந்த கோட்டைகள் வரலாற்றச் சிறப்பு வாய்ந்தன.

ஆவுடையார் கோவில்: இங்குள்ள ஆத்மநாத சுவாமி கோவிவின் ஆளுயரச் சிலை புகழ்பெற்றது. கருங்கல் கூரையும், மரவேலைப்பாடுகளும் கலை எழில் மிகுந்தவை.

ஆவூர்: ஜான் வெனான்டியஸ் ப்ச்செட் பாதிரியாரால் 1547-ம் ஆண்டு கட்டப்பட்டபழம்பெரும் தேவாலயம். தமிழறிஞர் வீரமாமுனிவர் இங்கு இறைப்பணி புரிந்துள்ளார்.

காட்டுபாவா பள்ளிவாசல்: புதுக்கோட்டையில் இருந்து முப்பது கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த பள்ளிவாசல். இஸ்லாமியர் மட்டுமன்றி இந்துக்களும் இங்கு தொழுவது தனிச்சிறப்பு. உர்ஸ் திருவிழா பிரபலமானது.

சித்தன்னவாசல்: உலகப்புகழ்பெற்ற ஓவியங்கள் நிறைந்த குகைக்கோவில். இதன் சுற்றுப்பறுத்தில் ஆதிகால இடுகாடுகளும், புதைக்கபடா முதுமக்கள் தாழிகளும் உள்ளன.

அரசு அருங்காட்சி சாலை: புவியியல் விலங்கியல், மானுடவியல், கல்வெட்டிய், வரலாற்று ஆவணங்கள், ஓவியங்கள் என ஏராளமான சேகரிப்புகள் அடங்கிய இது திருக்கோகர்ணத்தில் உள்ளது. வெவ்வேறு காலக்கட்டங்களைச் சேர்ந்த அற்புதமான சிலைகளும், வெண்கலப் கலைப்பொருட்களும் காண்போரை வியப்படையச் செய்யும்.

திருமயம்: புதுக்கோட்டையிலிருந்து 19கி.மீ. தொலைவிலுள்ள இக்கோயிலே இந்தியாவில் பெருமாள் அனந்தசயனத்திலிருக்கும் மிகப் பெரிய குகைக்கோயில் என்று சிறப்பைப் பெறுகிறது.

இருப்பிடமும், சிறப்புகளும்:


  • சென்னையிலிருந்து 390கி.மீ. தொலைவு
  • இந்தியா சுதந்திரம் பெற்றதும் இந்திய யூனியனில் இணைந்த முதல் சமஸ்தானம்
  • சித்தன்ன வாசல் ஓவியங்கள் புகழ்பெற்றவை.
  • குடுமியான் மலைக்கல்கவெட்டுகள் இசைக்கலையை போற்றுகிறது.
  • கொடும்பாளூர், விராலிமலை, குடுமியான்மலை, நார்த்தாமலை, புதுக்கோட்டை, ஆவுடையார் கோவில் சிறப்பு மிக்க இடங்கள்.
  • திருமயம், ஆவுடையார் கோவில் கலாச்சார செழுமை கொண்ட பகுதிகள்.
  • காருகுறிச்சியில் 500-ற்கும் மேற்பட்ட ரோம தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. இது இந்தோ - ரோம வாணிபத்திற்கான சான்றாக விளங்குகிறது.
  • நல்லூர் ஸ்ட்ரக்ச்ரல் ஃபேப்ரிகேஷன், மாத்தூர் சால்வென்ட் எக்ஸ்டாரக்ஷன் யூனிட்.

www.thangampalani.com thanks

திண்டுக்கல் மாவட்டம்



மாவட்டங்களின் கதைகள் - திண்டுக்கல் மாவட்டம் (Dindigul)


`
திண்டுக்கல் மாவட்டம்

தமிழகத்தின் முதல் நிகர்நிலைப் பல்கலைக்கழகமான காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தின் இருப்பிடம்.


அடிப்படைத் தகவல்கள்
தலைநகர்
 திண்டுக்கல்
பரப்பு
 6,266.கி.மீ
மக்கள்தொகை
 19,23,014
ஆண்கள்
 9,68,137
பெண்கள்
 9,54,877
மக்கள் நெருக்கம்
 317
ஆண்-பெண்
 286
எழுத்தறிவு விகிதம்
 69,35%
இந்துக்கள்
 16,84,808
கிருத்தவர்கள்
 1,45,265
இஸ்லாமியர்
 89,680
புவியியல் அமைவு
அட்சரேகை
 100.05-10.09 N
தீர்க்க ரேகை
 730-70-780.20 E

இணையதளம்:
www.dindigul.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: cllrdgl@tn.nic.in
தொலைபேசி: 0451-246119


எல்லைகள்: இதன் வடக்கில் ஈரோடு, கோவை, கரூர், திருச்சி மாவட்டங்களும்,  கிழக்கில் சிவகங்கை மற்றும் திருச்சி மாவட்டங்களும்; தெற்கில் மதுரை மாவட்டமும், மேற்கில் தேனி, கோயம்புத்தூர் மற்றும் கேரள மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: திப்புசுல்தான் ஆட்சியின் கீழிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நகரும். மதுரை மாவட்டத்திலிருந்து 1985, செப்டம்பர் 15-இல் திண்டுக்கல் அண்ணா எனும் பெயரில் புதிதாக உருவாக்கப்பட்டது.

1989, மார்ச் 27-இல் திண்டுக்கல் காயிதே மில்லத் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.  1991, ஜூலை 18-இல் திண்டுக்கல் அண்ணா என்று பெயர் மாற்றம் 1996-இல் திண்டுக்கல் மன்னர் திருமலை மாவட்டம் என்று பெயர் மாற்றம் பெற்றது.

இறுதியாக 1997, ஜூலை முதல் திண்டுக்கல் மாவட்டம் என அழைக்கப்படுகிறது.

முக்கிய ஆறுகள்: மருதாந்தி, வரதமாநதி, பாலாறு, பெருந்தலாறு, பரப்பலாறு, குதிரையாறு.

நிர்வாகப் பிரிவுகள்: 

வருவாய் கோட்டங்கள்-31: திண்டுக்கல், கொடைக்கானல், பழனி,
தாலுகாக்கள் - 8: திண்டுக்கல், நிலக்கோட்டை, ந்ததம், ஒட்டம் சத்திரம், வேடசந்தூர், பழனி , கொடைக்கானல், ஆத்தூர், நகராட்சிகள் - 3; திண்டுக்கல், கொடைக்கானல், பழனி.

ஊராட்சி ஒன்றியங்கள்-14: ஆத்தூர், திண்டுக்கல், ரெட்டியார் சத்திரம், சாணார்ப்பட்டி, ந்ததம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, பழனி, தோப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம், வட மதுரை, வேடசந்தூர், குசிலியாம்பாறை, கொடைக்கானல்.

குறிப்பிடத்தக்க இடங்கள்

கொடைக்கானல் ஏரி: கொடைக்கானலின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரி, மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி சர் வேரி ஹென்றி லெவிஞ்சி என்பவரால் திருத்தி அழகுபடுத்தப்படது.  1932-இல் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கபட்டது.

லா சலேத் சர்ச்: உலகிலேயே இரண்டு இடங்களில்தான் இந்த சர்ச் உள்ளது.  ஒன்றி பிரான்சிலும் மற்றொன்று கொடைக்கானலிலும் அமைந்துள்ளது.

தலையாறு அருவி: கொடைக்கானலுக்குச் செல்லும் மலைத் தொடர் சாலையில் பதிமூன்றாவத உகி.மீட்டரில் உள்ளது.  இதற்கு எலிவால் அருவி என்ற பெயரும் உண்டு.  இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றான இதன் உயர் 975 அடி.

கோக்கர்ஸ் வாக்: மலை விளிம்பு காலடிப்பாதை.  கொடைக்கானலின் தென்திசை உச்சியிலுள்ள இவ்விடத்தைக் கண்டறிந்தவர் பொறியாளர் கோக்கர்.  இது சரேலென இறங்கும் செங்குத்தான மலைச் சரிவைக்கொண்டது.

நடுப்பட்டி ஆஞ்சநேயர் கோயில்: ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் சிலை பெரும்பாலும் நீரால் சூழப்பட்டிருக்கும். திண்டுக்கல்லில் இருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ளது.

புனித ஜான் தேவாலயம்: 125 வருட பழமையான இத்தேவாலாயம் தாமஸ் பெர்னாண்டோ என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்டது.

பசுமைப் பள்ளத்தாக்கு: அழகும், அபாயமும் ஒருங்கே கொண்ட பள்ளத்தாக்கு.  இதன் முற்காலப் பெயர் தற்கொலை முனை.  கொடை ஏரியிலிருந்து பசுமைப் பள்ளத்தாக்கு 5.5 கி.மீ. தொலைவில் உள்ளது.

செம்பகனூர் அருங்காட்சியகம்: தொல்பொருள் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட மலரினங்கள் பலவும் பாதுகாக்கப்படுகின்றன.  300 வகையான அபூர்வ மலர் வகைகள் பராமரிக்கப்படுகின்றன.

கோல்ஃப் கிளப்: தேசிய அளவில் கோல்ஃ விளையாட்டுப் போட்டிகள்  இங்குநடைபெறுகின்றன.


இருப்பிடமும் சிறப்புகளும்:
சென்னியிலிருந்து 298 கி.மீ. தொலைவில் அமைந்தள்ளது.
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலருக்கு புகழ்பெற்றது.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி இங்கே அமைந்துள்ளது.
திண்டுக்கல்  பூட்டு சிறப்பு மிக்கது.
நிலக்கடலைஅங்கு விலாஸ் புகையிலைவெங்காயம் மொத்தச் சந்தை.
சின்னாளப்பட்டி சுங்கிடிப் புடவைகள்பூக்கள் மற்றும் திராட்சை,சிறு மலை வாழ்ப்பழம் போன்றவற்றிற்கு புகழ்  பெற்றது.
கொடைக்கானல்மலைக்கோட்டைபழனி மற்றும் திருமலைக் கேணி.
பழனிமுருகன் ஆலையம்திரமலைக்கேணி முருகன் ஆலயம்,கோபிநாத சுவாமிகள் மலைக் கோயில்வத்தலக்குண்டு செண்ட்ராய் பெருமாள் மலைக்கோயில்.
பேகம்பூர் பெரியப்பள்ளிவாசல்புளிப்பட்டி தர்காகொடைக்கானல் சலேத்துமேரி ஆலயம்பனுதி ஜோசஃப் தேவாலயம்.
தியாகி சுப்ரமணிய சிவா பிறந்த இடம் வத்தலக்குண்டு.
www.thangampalani.com thanks

பெரம்பலூர் மாவட்டம்



மாவட்டங்களின் கதைகள் - பெரம்பலூர் மாவட்டம்( PERAMBLLUR DISTRICT)


பெரம்பலூர் மாவட்டம்
( PERAMBLLUR DISTRICT)


தொல்லுயிர் எச்சங்களின் படிவு கொண்ட சாத்தனூர் மரப்படிவு அமைந்துள்ள மாவட்டம்


அடிப்படைத் தகவல்கள்
தலைநகர்பெரம்பலூர்
பரப்பு3,691 ச.கி.மீ
மக்கள்தொகை4,93,646
ஆண்கள்2,46,141
பெண்கள்2,47,505
மக்கள் நெருக்கம்282
ஆண்-பெண்1,006
எழுத்தறிவு விகிதம்66.07
இந்துக்கள்4,60,058
கிருத்தவர்கள்8,412
இஸ்லாமியர்த 24,778

புவியியல் அமைவு
அட்சரேகை: 100-57-110.30N
தீர்க்கரேகை: 780.40-790.30E
இணையதளம்www.peramballur.tn.nic.in

ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrpmb@tn.nic.in
தொலைபேசி: 04328-225700


நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள் - 1: பெரம்பலூர்
தாலூகாக்கள் - 3: பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம்
நகராட்சி-1: பெரம்பலூர்
ஊராட்சி ஒன்றியங்கள் - 4: பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர்.

இருப்பிடமும், சிறப்பியல்புகளும்:

  • சென்னையிலிருந்து 267 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
  • கடற்கரை இல்லா உள்மாவட்டம்.
  • ஜிப்சம், சுண்ணாம்புக்கல், நிலக்கரி, அரளைக் கற்கள் என்று கனிம வளம் மிகுந்தது.
  • தமிழகக் கலைத் திறனை உலகம் முழுவதும் பறைசாற்றும் மரச்சிற்பங்கள் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகில் உள்ள தழுதழை கிராமத்தில் உருவாக்கப்படுகின்றன.
  • துறையூர் சுருட்டு உலகப் புகழ்பெற்றது.


எல்லைகள்: இதன் வடக்கில் கடலூர், தெற்கில் திருச்சி, கிழக்கில் அரியலூர், தஞ்ஞாவூர், மேற்கில் நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்கள் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: திருச்சி மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்ட மாவட்டம் என்பதால் இதன் முற்கால வரலாறு என்பது திருச்சி மாவட்ட வரலாறே..

1995 இல் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர்) பெரம்பலூர் மாவட்டம் உருவானது.

பிற்பாடு 2000 ஆண்டில் பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அரியலூர் என்னும் இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. 2002 இல இந்த இரு மாவட்டங்களும் பெரம்பலூர் மாவட்டமாக ஒன்றிணைக்கப்பட்டது.

முக்கிய ஆறுகள்: வெள்ளாறு மற்றும் கொள்ளிடம்.

குறிப்பிடத்தக்க இடங்கள்

சோழகங்கம் ஏரி: முதலாம் இராசேந்திரச் சோழன் தனது வெற்றியைக் குறிக்கும் நினைவாக உருவாக்கிய 'வெற்றி நீர்த்தூண்' ஐந்து கி.மீ. தொலைவிற்கு நீண்டு பரந்து கிடக்கும். இந்த ஏரி 130 ச.கி.மீ. பரப்பளவு வயல்களுக்குப் பாசனம் அளித்து வருகிறது.

சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில்

மாவட்டத்தின் பிரபலமான கோயில்களில் ஒன்று. சித்திரை மாதம் முதல் நாளில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.

ரஞ்சன் குடி கோட்டை: கர்நாடக நவாப்பிடம் ஜாகிர்தார்ராக இருந்த ஒருவரால் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கச்சிதமாகச் செதுக்கப்பட்ட கல் சதுரங்களால் கட்டப்பட்ட இக் கோட்டைக்குள் ஓர் அரண்மனை, குடியிருப்புக் கட்டிடங்கள், பாதாள அறை, மசூதி மற்றும் கொடி மேடை ஆகியவை உள்ளன.

பச்சைமலை அருவி: பெரம்பலூரிலிருந்த 17 கி.மீ. தூரத்தில் வாடபுரம் கிராமத்தின் அருகிலுள்ள பச்சை மலை மயில் ஊற்று நீர் அருவி.

செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில்: குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட இக்கோவிலில் வருடம்தோறும் ஜனவரியில் தைப்பூசத்தின் போது பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

துருவக் கோட்டை: மங்களமேடு அருகில் உள்ளது.

சாத்தனூர் மரப்படிவு: Fossil Tree.

பிற இடங்கள்: செட்டிகுளம் பால தண்டாயுத பாணி ஆலயம், கள்ளக்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் ஆலயம், லப்பை குடிகாடு பெரிய தர்கா


தமிழக மாவட்டங்களின் முக்கியமான மலைகளின் பெயர்களை மாவட்ட வாரியாக வரிசைப்படுத்தி உள்ளேன். 


மலைகளும் மாவட்டங்களும்
அகஸ்தியர் மலை திருநெல்வேலி
ஏலகிரி மலை வேலூர்
கஞ்ச மலை சேலம்
கல்வராயன் மலை திருநெல்வேலி
கொடைக்கானல் மலை திண்டுக்கல்
கொல்லி மலை நாமக்கல்
சக்கு மலை சேலம்
சிவன் மலை ஈரோடு
செஞ்சி மலை விழுப்புரம்
சென்னி மலை ஈரோடு
சேர்வராயன் மலை சேலம்
தீர்த்த மலை தர்மபுரி
பச்சை மலை பெரம்பலூர்
பழனி மலை திண்டுக்கல்
மகேந்திரகிரி மலை திருநெல்வேலி
மருந்துவாழ் மலை கன்னியாகுமரி
ரத்னகிரி மலை வேலூர்
வள்ளிமலை வேலூர்
ஜவ்வாது மலை வேலூர்

பதிவைப் பற்றிய உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்படுகிறது. பதிவு பயனுள்ளதாக நீங்கள் கருதினால் உங்கள் நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் அறியத் தாருங்கள். விருப்பப்பட்டால் கீழிருக்கும் திரட்டிகளில் இணைத்து உங்கள் ஓட்டையும் பதிவு செய்யலாம். இதனால் பதிவு பலரையும் சென்றடைய ஒரு வாய்ப்பாக அமையும். இது முழுக்க முழுக்க உங்கள் விருப்பமே..!!

www.thangampalani.com thanks