ஞாயிறு, 17 பிப்ரவரி, 2013

இந்தியா (India) - தெரிந்து கொள்வோம்.


இந்தியா (India) - தெரிந்து கொள்வோம்.

இந்த பதிவு பல போட்டி தேர்வுகளுக்கு பயன்படும் எனவே  பெரிய பதிவாகவே தருகிறேன். 

VAO, TNPSC, RAILWAY EXAM AND OTHER COMP'VE EXAM TIPS

இந்தியா (India), தெற்கு ஆசியாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இந்தியா, இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதியை தன்னுள் அடக்கியுள்ளது. இந்தியா பாரதம் என்றும் அழைக்கப் படுகிறது. இந்தியா என்ற பெயர் சிந்து நதியின் பெயரிலிருந்து பெறப்பட்டது.
பரப்பளவில் இந்தியா ஏழாவது இடத்தில் உள்ள நாடு. இந்தியா மொத்தம் 7000 கி.மீ. நீண்ட கடல் எல்லைக் கொண்டது . வங்காளதேசம், மியன்மார், சீனா, பூட்டான், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் என்பவற்றுடன் இந்தியா எல்லையைப் பகிரிந்துக்கொண்டுள்ளது . இலங்கையும், மாலத்தீவும் இந்திய கிழக்கில் வங்காள விரிகுடாவையும், மேற்கில் அரபிக் கடலையும் தெற்கில்இந்தியப் பெருங்கடலையும் கொண்ட ஒரு தீபகற்பம் ஆகும்.

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

தமிழ்நாடு போக்குவரத்து அலுவலகங்களின் வாகனப் பதிவு எண்கள்


இன்றைய காலத்தில் போக்குவரத்து வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.வளருந்து வரும மக்கள்தொகைக்கு ஏற்ப அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிக எண்ணிக்கையில் போக்குவரத்து வாகனங்களும் தயாரிக்கப்படுகின்றன. அசுர வேகத்தில் இயங்கும் வாழ்க்கையில் இந்த வாகனங்களின் பங்கு அளப்பரியது. இப்படி நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு பதிவெண்(Register number) நிச்சயம் இருக்கும். ஒவ்வொரு பதிவெண்ணும் அந்த வாகனத்தின் உரிமையாளர் யார்? அவருடைய முகவரி என்ன? போன்ற அடையாளங்களைத் தெரிந்துகொள்ள உதவும். அதுபோல அந்த வாகனம் எங்கு பதிவு செய்யப்பட்டது. எந்த வட்டத்தைச் சேர்ந்தது என பார்த்தவுடனேயே கண்டுபிடிக்கலாம். இந்த பதிவில் தமிழ்நாடு வாகன பதிவு எண்களை பட்டியலிட்டு காட்டப்பட்டியிருக்கிறேன்.  அனைவருக்கும் இது  பயன்படும் என்று கருதுகிறேன். பதிவின் கீழே இது தொடர்பான படங்களையும் இணைத்திருக்கிறேன். நிச்சயம் உங்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன்.


தமிழ்நாடு போக்குவரத்து அலுவலகங்களின் வாகனப் பதிவு எண்கள்

போக்குவரத்து பதிவெண்கள் - தமிழ்நாடு

1. சென்னை - சைதாப்பேட்டை
TN-01
2. சென்னை - அண்ணாநகர்
TN-02
3. சென்னை - புளியந்தோப்பு
TN-04
4. சென்னை - வியாசர்பாடி
TN-05
5. சென்னை - கொட்டிவாக்கம்
TN-07
6. சென்னை - அசோக்நகர்
TN-09
7. சென்னை - வளசரவாக்கம்
TN-10
8. திருவள்ளூர்
TN-20
9. காஞ்சிபுரம்
TN-21
10. மீனம்பாக்கம்
TN-22
11. வேலூர்
TN-23
12. திருவண்ணாமலை
TN-25
13. சேலம்
TN-27
14. நாமக்கல்
TN-28
15. தர்மபுரி
TN-29
16. மேட்டூர்
TN-30
17. கடலூர்
TN-31
18. விழுப்புரம்
TN-32
19. ஈரோடு
TN-33
20. திருச்செங்கோடு
TN-34
21. கோயம்புத்தூர்
TN-37
22. கோயம்புத்தூர்
TN-38
23. திருப்பூர்
TN-39
24. மேட்டுப்பாளையம்
TN-40
25. பொள்ளாச்சி
TN-41
26. நீலகிரி
TN-43
27. திருச்சி
TN-45
28. பெரம்பலூர்
TN-46
29. கரூர்
TN-47
30. ஸ்ரீரங்கம்
TN-48
31. தஞ்சாவூர்
TN-49
32. திருவாரூர்
TN-50
33. நாகப்பட்டினம்
TN-51
34. புதுக்கோட்டை
TN-55
35. திண்டுக்கல்
TN-57
36. மதுரை
TN-58
37. மதுரை
TN-59
38. பெரியகுளம்
TN-60
39. சிவகங்கை
TN-63
40. இராமநாதபுரம்
 TN-65
41. விருதுநகர்
TN-67
42. தூத்துக்குடி
TN-69


ஞாயிறு, 22 ஜூலை, 2012

ஆலம்பரா கோட்டை - கடப்பாக்கம் (Alambara Fort )


ஆலம்பரா கோட்டை - கடப்பாக்கம் (Alambara Fort )


ஆலம்பரா கோட்டை...
ஈசிஆர் ரோட்டில் முதலியார் குப்பம் படகு இல்லம் சென்று விட்டு அடுத்து எங்காவது பீச்சுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து போனது கடப்பாக்கம் என்கிற ஒரு சின்ன கடற்கரை கிராமத்திற்கு..சுனாமியால் பாதிக்கப்பட்டு இன்னும் முழுமை அடையாமல் இருக்கிறது இந்த ஊர்.சென்னையில் இருந்து பாண்டி செல்லும் ஈசிஆர் ரோட்டில் இருந்து இடது பக்கம் திரும்பினால் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் கடற்கரையை அடையலாம்.
கடற்கரை வரை சென்று இறங்கியவுடன் நம்மை வரவேற்பது மீன் கவிச்சியும், காய வைத்துள்ள மீன் கருவாடும்... அப்புறம் நல்ல கடல் காற்றும்.


ஆட்களின் நடமாட்டம் அதிகம் இல்லாமல் நன்றாக அமைதியாக இருக்கிறது இந்த கடலோர பகுதி.மீனவர்களின் கட்டுமரங்கள் நிறைய இருக்கின்றன. காய்ந்து போன மீன்களின் முள் கூடுகள் நிறைய கிடக்கின்றன.கொஞ்சநேரம் பீச் மணலில் நடந்து விட்டு பார்க்கையில் ஒரு சிதிலமடைந்த கோட்டை நம் கண்ணுக்கு புலப்பட என்னவென்று கேட்க ஆலம்பரா கோட்டை என்றும் திப்பு சுல்தான் கோட்டை என்றும் சொன்னனர்.நடந்து செல்ல லேட்டாகும் என்பதால் வண்டியில் கோட்டைக்கு கிளம்பினோம்.கிராமத்தின் ஊடே செல்கிற ரோட்டில் சென்றோம்.நிறைய வீடுகள் சுனாமியால் பாதிக்கப்பட்டு இன்னும் அப்படியே இருக்கின்றன.
ஆலம்பரா கோட்டை ரொம்ப சிதிலமடைந்து காணப்படுகிறது என்பதை உணர்த்தும் விதமாகவே இக்கோட்டையின் பெயர் தாங்கிய போர்டும் மிக மோசமான நிலையில் இருக்கிறது.கோட்டையை அடைந்தோம். பேக் வாட்டரில் உள்ளபடி பாதி மணலில் புதைந்தபடி இதன் சுவர்கள் இருக்கின்றன.கோட்டை சுவர் இன்னும் பலம் மிக்க தாகவே இருக்கிறது.


மிகப்பெரிய பரப்பளவில் இக்கோட்டை அமைந்து இருந்தாலும் தற்போது சிதிலமடைந்து ஆங்காங்கே மண்ணில் புதைந்து இருந்தாலும் இந்த கோட்டையை ஆண்ட மன்னர்களின் வரலாற்றை, அவர்களுடைய பலத்தை பறை சாற்றுகிறது.இந்த கோட்டைக்கு நடுவில் ஒரு சமாதி இருக்கிறது.இது யாருடையது என்பதற்கான விவரம் தெரியவில்லை.ஆனால் இங்கு அதிகம் நடைபெறும் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகளின் பெயர்களை மட்டும் தெரிந்து வைத்து இருக்கிறார்கள் இங்குள்ள வாசிகள்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு திரும்பினோம்..

நேசங்களுடன்
ஜீவானந்தம்


kovaineram thanks

வியாழன், 8 மார்ச், 2012

பெரம்பலூர் மாவட்டம்


மாவட்டங்களின் கதைகள் - பெரம்பலூர் மாவட்டம்( PERAMBLLUR DISTRICT)


பெரம்பலூர் மாவட்டம்
( PERAMBLLUR DISTRICT)

தொல்லுயிர் எச்சங்களின் படிவு கொண்ட சாத்தனூர் மரப்படிவு அமைந்துள்ள மாவட்டம்

அடிப்படைத் தகவல்கள்
தலைநகர்பெரம்பலூர்
பரப்பு3,691 ச.கி.மீ
மக்கள்தொகை4,93,646
ஆண்கள்2,46,141
பெண்கள்2,47,505
மக்கள் நெருக்கம்282
ஆண்-பெண்1,006
எழுத்தறிவு விகிதம்66.07
இந்துக்கள்4,60,058
கிருத்தவர்கள்8,412
இஸ்லாமியர்த 24,778

புவியியல் அமைவு
அட்சரேகை: 100-57-110.30N
தீர்க்கரேகை: 780.40-790.30E
இணையதளம்www.peramballur.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrpmb@tn.nic.in
தொலைபேசி: 04328-225700

நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள் - 1: பெரம்பலூர்
தாலூகாக்கள் - 3: பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம்
நகராட்சி-1: பெரம்பலூர்
ஊராட்சி ஒன்றியங்கள் - 4: பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர்.
இருப்பிடமும், சிறப்பியல்புகளும்:

  • சென்னையிலிருந்து 267 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
  • கடற்கரை இல்லா உள்மாவட்டம்.
  • ஜிப்சம், சுண்ணாம்புக்கல், நிலக்கரி, அரளைக் கற்கள் என்று கனிம வளம் மிகுந்தது.
  • தமிழகக் கலைத் திறனை உலகம் முழுவதும் பறைசாற்றும் மரச்சிற்பங்கள் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகில் உள்ள தழுதழை கிராமத்தில் உருவாக்கப்படுகின்றன.
  • துறையூர் சுருட்டு உலகப் புகழ்பெற்றது.


எல்லைகள்: இதன் வடக்கில் கடலூர், தெற்கில் திருச்சி, கிழக்கில் அரியலூர், தஞ்ஞாவூர், மேற்கில் நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்கள் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: திருச்சி மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட்ட மாவட்டம் என்பதால் இதன் முற்கால வரலாறு என்பது திருச்சி மாவட்ட வரலாறே..

1995 இல் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு (திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர்) பெரம்பலூர் மாவட்டம் உருவானது.

பிற்பாடு 2000 ஆண்டில் பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அரியலூர் என்னும் இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. 2002 இல இந்த இரு மாவட்டங்களும் பெரம்பலூர் மாவட்டமாக ஒன்றிணைக்கப்பட்டது.

முக்கிய ஆறுகள்: வெள்ளாறு மற்றும் கொள்ளிடம்.
குறிப்பிடத்தக்க இடங்கள்

சோழகங்கம் ஏரி: முதலாம் இராசேந்திரச் சோழன் தனது வெற்றியைக் குறிக்கும் நினைவாக உருவாக்கிய 'வெற்றி நீர்த்தூண்' ஐந்து கி.மீ. தொலைவிற்கு நீண்டு பரந்து கிடக்கும். இந்த ஏரி 130 ச.கி.மீ. பரப்பளவு வயல்களுக்குப் பாசனம் அளித்து வருகிறது.
சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில்

மாவட்டத்தின் பிரபலமான கோயில்களில் ஒன்று. சித்திரை மாதம் முதல் நாளில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது.

ரஞ்சன் குடி கோட்டை: கர்நாடக நவாப்பிடம் ஜாகிர்தார்ராக இருந்த ஒருவரால் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கச்சிதமாகச் செதுக்கப்பட்ட கல் சதுரங்களால் கட்டப்பட்ட இக் கோட்டைக்குள் ஓர் அரண்மனை, குடியிருப்புக் கட்டிடங்கள், பாதாள அறை, மசூதி மற்றும் கொடி மேடை ஆகியவை உள்ளன.

பச்சைமலை அருவி: பெரம்பலூரிலிருந்த 17 கி.மீ. தூரத்தில் வாடபுரம் கிராமத்தின் அருகிலுள்ள பச்சை மலை மயில் ஊற்று நீர் அருவி.

செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் கோவில்: குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட இக்கோவிலில் வருடம்தோறும் ஜனவரியில் தைப்பூசத்தின் போது பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

துருவக் கோட்டை: மங்களமேடு அருகில் உள்ளது.

சாத்தனூர் மரப்படிவு: Fossil Tree.

பிற இடங்கள்: செட்டிகுளம் பால தண்டாயுத பாணி ஆலயம், கள்ளக்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் ஆலயம், லப்பை குடிகாடு பெரிய தர்கா
தமிழக மாவட்டங்களின் முக்கியமான மலைகளின் பெயர்களை மாவட்ட வாரியாக வரிசைப்படுத்தி உள்ளேன். 

மலைகளும் மாவட்டங்களும்
அகஸ்தியர் மலை திருநெல்வேலி
ஏலகிரி மலை வேலூர்
கஞ்ச மலை சேலம்
கல்வராயன் மலை திருநெல்வேலி
கொடைக்கானல் மலை திண்டுக்கல்
கொல்லி மலை நாமக்கல்
சக்கு மலை சேலம்
சிவன் மலை ஈரோடு
செஞ்சி மலை விழுப்புரம்
சென்னி மலை ஈரோடு
சேர்வராயன் மலை சேலம்
தீர்த்த மலை தர்மபுரி
பச்சை மலை பெரம்பலூர்
பழனி மலை திண்டுக்கல்
மகேந்திரகிரி மலை திருநெல்வேலி
மருந்துவாழ் மலை கன்னியாகுமரி
ரத்னகிரி மலை வேலூர்
வள்ளிமலை வேலூர்
ஜவ்வாது மலை வேலூர்

பதிவைப் பற்றிய உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்படுகிறது. பதிவு பயனுள்ளதாக நீங்கள் கருதினால் உங்கள் நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் அறியத் தாருங்கள். விருப்பப்பட்டால் கீழிருக்கும் திரட்டிகளில் இணைத்து உங்கள் ஓட்டையும் பதிவு செய்யலாம். இதனால் பதிவு பலரையும் சென்றடைய ஒரு வாய்ப்பாக அமையும். இது முழுக்க முழுக்க உங்கள் விருப்பமே..!!www.thangampalani.com thanks